அர்ப்பணிப்பில்லாத அஜித்தால் மகிழ் போட்ட சண்டை.. ஏகே இமேஜை மொத்தமா சந்தி சிரிக்க செய்த திருமேனி

ஆரம்பத்தில் இருந்தே விடாமுயற்சிக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் முடியவில்லை. படத்தில் நடிக்கும் மொத்த ஆர்டிஸ்ட்டும் ஈகோ பிடித்தவர்களாக இருக்கிறார்களாம். இவர்களுக்குள் நன்றாக பேசிக் கொள்வதே கிடையாது. ஏதோ வருவதும், போவதுமாய் சூட்டிங் ஸ்பாட் அல்லோலபட்டு கொண்டு இருக்கிறது.

ஒரு பக்கம் அஜித் தன் இஷ்டத்துக்கு இந்த படத்தில் விளையாடி வருகிறாராம். இந்தப் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனியிடம், இப்பொழுது பெயரில் மட்டும் தான் மகிழ்ச்சி இருக்கிறது. மொத்த யூனிட்டும் விடாமுயற்சி படத்தில் அவரை கந்தல் கந்தலாக ஆக்கிவிட்டது.

ஒரு கட்டத்தில் நாம் நினைத்தது படத்தில் வருமா என்பதே திருமேனிக்கு சந்தேகத்தை கொடுத்துவிட்டது. அந்த அளவிற்கு இந்த படத்தில் மகிழ் கஷ்டப்பட்டு விட்டார். கடைசியாக இந்த படத்திற்கு ஒரு 18 நாட்கள் சூட்டிங் இருக்கிறதாம். கிளைமேக்ஸ் சண்டை காட்சிகள் எடுப்பதாக திட்டம் போட்டு இருக்கிறார்கள்.

அஜர்பைஜானில் நடப்பதாக இருந்த இந்த கிளைமேக்ஸ் காட்சிகளுக்கு அஜித் இடையூறு செய்து வருகிறார். நான் சென்னை போக வேண்டும், எனக்கு அங்கே வேலை இருக்கிறது. அதனால் அஜர்பைஜானை போல் அப்படியே சென்னையில் செட்டை உருவாக்குங்கள் என ஒற்றைக் காலில் நிற்கிறாராம் அஜித் .

ஏகே இமேஜை மொத்தமா டேமேஜ் செய்த திருமேனி

இதனால் அஜித் மீது மகிழ்த்திருமேனி உச்சகட்ட கடுப்பில் இருக்கிறார். இவர் இஷ்டத்துக்கு போகும் இடமெல்லாம் சூட்டிங் செய்ய சொல்கிறார். தயாரிப்பாளருக்கு பண பிரச்சினை இருக்கிறது. இதனால் சூட் செய்வதற்கு பண பற்றாக்குறையால் பெரிய பிரச்சனைகள் வருகிறது என்றெல்லாம் மகிழ்ந்திருமேனி கத்தி வருகிறாராம்.

தெரியாமல் இந்த படத்தை கையில் எடுத்து விட்டோம் என நெருங்கிய வட்டாரங்களிடம் புலம்பி வருகிறார் மகிழ். இந்த படம் பண்ணுவதற்கு பதிலாக இரண்டு பெரிய பட்ஜெட் படத்தை பண்ணி முடித்திருக்கலாம். அஜித்துக்கு, ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தில் ஒரு டெடிகேஷன் இல்லை. இதுதான் இந்த ப்ராஜெக்ட் ஒப்பேராததற்கு காரணம்.

Next Story

- Advertisement -