மூன்று ஆண்டு சிறை தண்டனை.. தப்பிப்பாரா இர்ஃபான் ?

Irfan: நேற்றிலிருந்து யூடியூபர் இர்ஃபான் விவகாரம் சோசியல் மீடியாவில் கொழுந்துவிட்டு எரிகிறது. தனக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என அவர் அறிவித்தது தான் இத்தனை பிரச்சினைக்கும் காரணம்.

துபாயில் இந்த பரிசோதனையை செய்த அவர் தனக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என ஒரு பார்ட்டி வைத்து பகிரங்கப்படுத்தி இருக்கிறார். இதுதான் தற்போது கடும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது.

இந்தியாவை பொறுத்த வரையில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என தெரிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். அந்த வகையில் இர்பான் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? அவர் கைது செய்யப்படுவாரா? என பல கேள்விகள் இருக்கிறது.

இர்ஃபான் செய்த தவறு

அதற்கான விளக்கத்தை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, இர்ஃபான் இந்த பரிசோதனையை மேற்கொண்டது வெளிநாட்டில் தான்.

அதனால் இந்திய சட்டம் அயல்நாட்டுக்கு பொருந்தாது. ஆனால் இதில் அவர் செய்த மிகப்பெரும் தவறு அதை வெளிப்படையாக அறிவித்தது. ஒரு வேளை இதை அவரும் அவருடைய மனைவியும் ரகசியமாக வைத்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது.

மேலும் இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. தமிழக சுகாதாரத் துறை தான் முன்வந்து நீதிமன்றத்தில் புகார் கொடுக்க முடியும். அதை வைத்து தான் விசாரணை நடத்தப்படும்.

சட்டம் சொல்வது என்ன

அதற்கு இர்ஃபான் தரப்பிலிருந்து வரும் விளக்கத்தை பொருத்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது தெரியவரும். ஆனால் இதில் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய முடியும். ஒன்று கருவில் இருக்கும் குழந்தையை பற்றி அறிவித்தது.

மற்றொன்று தன் மனைவியை ஊக்கப்படுத்தி இந்த பரிசோதனைக்கு அழைத்துச் சென்றது. இந்த இரண்டு பிரிவுகளில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் நிச்சயம் மூன்று ஆண்டு காலம் வரை தண்டனை கிடைக்கும்.

அது மட்டும் இன்றி அபராதமும் விதிக்கப்படும். அதன் பேரில் தற்போது தமிழக சுகாதாரத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். அதற்கு இர்ஃபான் தரப்பில் இருந்து வரும் விளக்கத்தை பொருத்து இந்த வழக்கு நகரும் என வழக்கறிஞர் சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுவரை இர்ஃபானை புரட்டி எடுத்த சோதனைகள்

Next Story

- Advertisement -