குக் வித் கோமாளி சீசன் 5 வில் கலந்து கொள்ளும் 7 போட்டியாளர்கள்.. செப் தாமுகே டஃப் கொடுக்க வரும் உலகம் சுற்றும் யூடியூபர்

Vijay TV : விஜய் டிவியில் அதிக டிஆர்பியை பெரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. கடந்த நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது.

மேலும் இந்த முறை வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கேற்க இருக்கிறார். மேலும் ரக்சன் உடன் இணைந்து மணிமேகலையும் இந்த முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்த சீசனில் கலந்து கொள்ளும் ஐந்து போட்டியாளர்களின் பெயர்களை இப்போது பார்க்கலாம். முதலாவதாக யூடியூபர் இர்பான் கலந்து கொள்ள உள்ளார். இவர் வெளிநாடுகள் சென்று பிரபல ஹோட்டல்களில் அறுசுவைகளை சுவைக்க கூடியவர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெரும் பிரியங்கா

இப்போது இவரே இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார். அடுத்ததாக விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றிய பிரியங்காவும் இந்த சீசனில் கலந்து கொள்கிறார். மூன்றாவதாக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவும் போட்டியாளராக உள்ளார்.

மேலும் நான்காவதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் நடித்து வரும் வசந்த் வாசி பங்கு பெறுகிறார். மேலும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த விடிவி கணேஷ் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்.

வெளிநாட்டில் இயற்கை விவசாயம் செய்யும் கிருஷ்ணா மெக்கன்சி இந்நிகழ்ச்சியில் பங்கு பெற இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜா மந்திரி, கண்ணகி போன்ற படங்களில் நடித்த ஷாலினி சோயாவும் கலந்து கொள்ள இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்