புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

என்ன பாக்யா இது குடும்பமே இரண்டா கிடக்குது.. இதுல எலக்சன்ல நின்னு என்ன கிழிக்க போற

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கல்லூரியில் காதலித்த ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டார் கோபி. ஆனால் கோபியை இழுத்து பிடிக்காமல் அவர் போக்கிலே விட்டுவிட்ட பாக்யா.

இந்த நிலையில்  தற்போது ஏரியா அசோசியேஷன் தேர்தலில் நின்று என்ன கிழிக்கப் போகிறார் என்று இந்த சீரியலை சின்னத்திரை ரசிகர்கள் பாக்யாவை கழுவி கழுவி ஊற்றுகின்றனர். ஏனென்றால் பாக்யா தன்னுடைய கணவர் தவறான வழியில் போகிறார் என தெரிந்தும் அவருக்கு தக்க பாடம் புகட்டாமல் சுலபமாக விவாகரத்து கொடுத்துவிட்டு தண்ணீர் தெளித்து விட்டார்.

Also Read: டிஆர்பி-யில் சன் டிவி-யை சுக்கா போட்ட விஜய் டிவி.. பாக்யா, கண்ணம்மாவிற்கு இவ்வளவு மவுசா

இப்படி இருக்கும் சூழலில் அவர் தங்கி இருக்கும் குடியிருப்பின் செகரட்டரி தேர்தல் நடக்கப் போகிறது. முன்பு இருந்த ஏரியா அசோசியேசன் செகரட்டரி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதால் குடியிருப்பு பகுதி மக்களின் நலன்களை புரிந்து கொள்பவர் யாராவது இந்த தேர்தலில் நிற்க வேண்டும் என முடிவெடுக்கின்றனர்.

உடனே பாக்யாவை அனைவரும் பரிந்துரைத்து, அவரை வெற்றி பெற வைப்பதற்காக பிரச்சாரத்தையும் துவங்கி உள்ளனர். ஏற்கனவே குடும்பம் இரண்டு பட்டு இருக்கும் நிலையில் அதை சரி செய்ய முடியாத பாக்யா எலக்சனில் நின்னு என்ன கிழிக்க போகிறார் என்று கோபி உட்பட அங்கிருக்கும் சிலர் பாக்யாவை வறுத்தெடுக்கின்றனர்.

Also Read: பொண்டாட்டி கூட நடிக்க நம்பர் ஒன் சீரியலை விட்டு விலகிய கணவன்.. விஜய் டிவி துரத்திவிட்டும் அடங்கல

ஏற்கனவே சமையல் ஆர்டரை கொடுத்து அங்குள்ள பெண்களின் ஆதரவை பெற்றிருக்கும் பாக்யா நிச்சயம் இந்த தேர்தலில் வெற்றி பெற தான் போகிறார். இந்த ஒரு விஷயம் வைத்தே இன்னும் ஒரு வருடம் இந்த சீரியலை இழுத்தடித்து விடலாம் என்று பாக்கியலட்சுமி சீரியலின் இயக்குனர் பக்கா பிளான் போட்டு செயல்படுகிறார்.

மேலும் இந்த சீரியலை இன்னும் சில மாதங்களுக்கு காமெடி ட்ராக்ராகில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதில் கோபி தான் இனிவரும் நாட்களில் பாக்யாவிற்கும் ராதிகாவிற்கும் இடையில் கஞ்சியாக போகிறார்.

Also Read: வந்த வேலை முடிஞ்சிடுச்சு.. சக்கரை பொங்கல் வடகறியாக மாறிய கோபியின் வாழ்க்கை

- Advertisement -

Trending News