மொத்த நம்பிக்கை தன்மையையும் இழந்த விஷால்.. தலை தெறிக்க ஓடும் தயாரிப்பாளர்கள்

Vishal: எந்த நேரத்தில் சண்டைக்கோழி என்ற படத்தில் நடித்தாரோ அதிலிருந்து இவர் நிறைய பேரிடம் சண்டை போட்டு வருகிறார். மிஸ்கின், லைக்கா, வரலட்சுமி என சினிமா துறையில் நிறைய பேரை பகைத்துக் கொண்டுள்ளார்.

இவர் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை இயக்கியவர் மிஷ்கின். இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப் போவதாக இருந்த நிலையில் விஷால் மற்றும் மிஸ்கின் இடையே சண்டை வந்தது.

தலை தெறிக்க ஓடும் தயாரிப்பாளர்கள்

அதன் பின்னர் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை நானே எடுக்கிறேன் என்று களம் இறங்கினார் விஷால். அதற்காக லண்டனில் லொகேஷன் எல்லாம் பார்த்து விட்டார். ஆனால் இந்த படத்தை தயாரிப்பதற்கு விஷாலை நம்பி யாரும் முன் வரவில்லை . அதனால் இந்த படம் ட்ராப்பாகியுள்ளது.

ஏற்கனவே விஷாலுக்கு உதவி செய்த தயாரிப்பு நிறுவனமாகிய லைக்காவை கோர்ட் கேஸ் என்று இழுத்து பெயரை கெடுத்து விட்டார். இப்படி நம்பியவர்களுக்கே விஷால் உண்மையாக இல்லை என அவரை வைத்து தயாரிப்பதற்கு பயப்படுகிறார்கள்.

தற்சமயம் விஷால் கைவசம் 3 படங்கள் இருந்த நிலையில் இரண்டு படங்கள் தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் டிராப் ஆகிவிட்டது. சுந்தர் சி யின் மதகத ராஜா, துப்பறிவாளன் 2, பாரி சிங்கராஜா என கைவசம் இருந்த படங்கள் எல்லாம் பிரச்சினையில் இருக்கிறது.

Next Story

- Advertisement -