27 வயது நடிகையை திருமணம் செய்யும் விஷால்.. முரட்டு சிங்கிளுக்கு கிடைத்த ஜோடி

Actor Vishal: 45 வயதாகும் விஷால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக சுற்றி வருகிறார். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின் தான் திருமணம் என்று கூறி வந்த இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு அனிஷா ரெட்டி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால் சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக அந்த திருமணம் பாதியிலேயே நின்று போனது. அதற்கு முன்பாகவே இவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலித்து வந்தார். ஆனால் நடிகர் சங்க தேர்தலின் போது ஏற்பட்ட சர்ச்சை மற்றும் சரத்குமாரை இவர் தாறுமாறாக விமர்சித்தது போன்ற பிரச்சனைகளால் இந்த காதல் முறிந்தது.

Also read: சரத்குமார் சங்கை பிடித்த இருவர்.. இக்கட்டான சூழ்நிலையில் சங்கரை விட்டுக் கொடுத்த சுப்ரீம் ஸ்டார்

இப்படி விஷாலுக்கும் திருமணத்திற்கும் ராசியே இல்லை என்ற ரீதியில் ஒவ்வொரு சம்பவமும் நடந்தது. அதை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறி இருக்கிறார்.

இந்த சூழலில் முரட்டு சிங்கிளான விஷால் தற்போது திருமண பந்தத்தில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதிலும் 27 வயது இளம் நடிகையை இவர் திருமணம் செய்து கொள்ளப் போவது தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: மகனின் 14-வது பிறந்த நாளை கொண்டாடிய விஷால்.. வெளியான புகைப்படத்தால் வந்த அதிர்ச்சி

அந்த வகையில் விஷாலுடன் சில திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கும் லட்சுமிமேனன் அவருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். ஆனால் லட்சுமிமேனன் சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கிய நிலையில் இந்த பேச்சு அப்படியே முடிந்து போனது. ஆனால் தற்போது அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்களாம்.

அந்த பேச்சு வார்த்தையில் விஷாலுக்கும் இவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்ற பேச்சு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அந்த வகையில் இது உண்மையா அல்லது வழக்கம் போல வதந்தியா என்று தெரியாமல் ஒரு குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளது.

Also read: ரஜினியவே வந்து பாருன்னு மிரட்டும் விநாயகன்.. மொக்க, லொடுக்கு என கலக்கிய 5 படங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்