சரத்குமார் சங்கை பிடித்த இருவர்.. இக்கட்டான சூழ்நிலையில் சங்கரை விட்டுக் கொடுத்த சுப்ரீம் ஸ்டார்

Actor Sarathkumar: சரத்குமார் இப்போது தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த போர் தொழில் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது இவருக்கான வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரை இக்கட்டான நேரத்தில் இவர் விட்டுக் கொடுத்திருப்பது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அதாவது சங்கர் இயக்கத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பிய ஜென்டில்மேன் படத்தில் முதன்முதலாக சரத்குமார் தான் நடிக்க இருந்தார்.

Also read: சரத்குமார் போல் காசுக்காக சூர்யா செய்த காரியம்.. கங்குவா வீடியோவால் வெடிக்கும் சர்ச்சை

ஆனால் சில காரணங்களால் இவரால் நடிக்க முடியாமல் போனது. அப்படி என்ன காரணம் என்று பார்த்தால் மீசை தான் பெரும் பிரச்சனையாக இருந்திருக்கிறது. அதாவது ஜென்டில்மேன் படம் தொடங்கப்படுவதற்கான அனைத்து வேலைகளும் அப்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

சரத்குமாரின் பெசன்ட் நகர் வீட்டில் ஃபோட்டோ ஷூட் எல்லாம் நடத்தப்பட்டு தயாராக இருந்தது. இன்விடேஷன் அடிப்பது மட்டும் தான் பாக்கியாக இருந்தது. அப்போது தான் அந்த பிரச்சனை துளிர் விட்டிருக்கிறது. அதாவது சரத்குமார் அப்போது ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிக்க கமிட் ஆகி இருந்தார்.

Also read: மொத்த நெருப்பையும் பற்ற வைத்த சரத்குமார்.. செகண்ட் இன்னிங்ஸில் சகுனியாய் மாறிய சுப்ரீம் ஸ்டார்

ஒன்று சங்கரின் ஜென்டில்மேன், மற்றொன்று பவித்ரனின் ஐ லவ் இந்தியா. இரு படமும் முக்கியம் என்பதால் சமாளித்து நடித்து விடலாம் என்ற பிளானில் தான் சரத்குமார் இருந்திருக்கிறார். ஆனால் ஜென்டில்மேன் படத்திற்கு மீசை இருக்கக் கூடாது என சங்கர் சொல்லியிருக்கிறார்.

அதேபோன்று பவித்ரன் தன்னுடைய படத்திற்கு மீசை வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதனால் சரத்குமார் யார் படத்தை விட்டுக் கொடுப்பது என்ற இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். யோசித்துப் பார்த்ததில் தனக்கு சூரியன், வசந்தகால பறவைகள் போன்ற ஹிட் படங்களை கொடுத்த பவித்ரனுக்கு தான் அவர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என யோசித்து இருக்கிறார். அதனாலேயே அவர் ஜென்டில்மேன் படத்தில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது.

Also read: கதையின் நாயகனாக அவதரித்த சரத்குமார்.. செகண்ட் இன்னிங்ஸில் கெட்டியாக பிடித்து வரிசை கட்டி இருக்கும் படங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்