ரஜினியவே வந்து பாருன்னு மிரட்டும் விநாயகன்.. மொக்க, லொடுக்கு என கலக்கிய 5 படங்கள்

Actor Vinayakan: சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து இன்று ரஜினியின் ஜெயிலர் படம் வரை நடிக்க வாய்ப்பை பெற்றவர் தான் விநாயகன். இவர் பெரும்பாலான படங்களில் துணை மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் அவர் கலக்கிய ஐந்து படங்களை தற்போது பார்க்கலாம்.

திமிரு : விஷால், ரீமா சென், ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் திமிரு. இந்தப் படத்தில் ஸ்ரேயா ரெட்டிக்கு பக்கபலமாக லொடுக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார் விநாயகன். திமிரு படமே விநாயகனின் அறிமுகப்படமாக அமைந்தது. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் ஊனமுற்றவராக நடித்திருப்பார்.

Also Read : மகனின் 14-வது பிறந்த நாளை கொண்டாடிய விஷால்.. வெளியான புகைப்படத்தால் வந்த அதிர்ச்சி

சிலம்பாட்டம் : சரவணன் இயக்கத்தில் சிம்பு, சினேகா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சிலம்பாட்டம். இப்படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த படத்தில் சிம்பு தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் அவரது உயிர் நண்பனாக விநாயகன் நடித்திருந்தார்.

சிறுத்தை : கார்த்தி, தமன்னா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சிறுத்தை. இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வில்லன் தாதாவாக பாவாஜியாக அவினாஷ் நடித்திருந்தார். அவருக்கு உதவியாளராக விநாயகன் இந்த படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

Also Read : சிம்பு இடத்தை பிடித்த வைகைப்புயல் வடிவேலு. . மாமன்னன் படத்தால் அடித்த ஜாக்பாட்

மரியான் : பரத் பாலா இயக்கத்தில் தனுஷ் மற்றும் பார்வதி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் மரியான். இந்த படத்தில் தீக்குச்சி என்ற கதாபாத்திரத்தில் விநாயகன் நடித்து அசத்தி இருந்தார். மலையாளத்தில் நிறைய படங்கள் நடித்திருந்தாலும் தமிழில் மரியான் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது.

ஜெயிலர் : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ் குமார் மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜெயிலர். தனுஷின் மரியான் படத்திற்கு பிறகு இந்த படத்தில் தான் விநாயகன் நடித்திருக்கிறார். மேலும் ரஜினியே மிரட்டும் அளவுக்கு வில்லனாக நடித்துள்ளாராம்.

Also Read : நண்பனுக்காக தயாரிப்பாளராகும் நெல்சன்.. எல்லாம் ஜெயிலர் கொடுக்குற தைரியம்

- Advertisement -