டென்ஷனாவே வேலை பார்த்து போர் அடிச்சிடுச்சு.. கமலுக்கு முன் ரிலாக்ஸாக ஒரு கூட்டணி போட போகும் வினோத்

H.Vinoth
H.Vinoth

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஹெச் வினோத். மேலும் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பு வினோத்துக்கு கிடைத்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணியில் வலிமை படம் உருவானது.

இப்போது மூன்றாவது முறையாக அஜித், வினோத், போனி கபூர் கூட்டணியில் துணிவு படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

Also Read : விளம்பரம் தேவையில்லை என சொன்னது எல்லாம் பொய்யா.? வினோத்தை வைத்து துணிவு அஜித் ஆடும் ஆட்டம்

இந்நிலையில் தொடர்ந்து அஜித்துடன் கூட்டணி போட்டு வந்த நிலையில் வினோத் கமலின் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் கமல் படத்துக்கு முன்பே காமெடி நடிகர் ஒருவரின் படத்தை வினோத் இயக்க உள்ளாராம். இப்போது மாற்றத்திற்காக வினோத் ரிலாக்ஸாக ஒரு படத்தை இயக்க ஆசைப்படுகிறார்.

அதாவது படு பிஸியாக இருக்கும் ஒரு நடிகர் என்றால் அது யோகி பாபு தான். ஹீரோக்களின் கால்ஷீட் கூட வாங்கி விடலாம் போல யோகி பாபுவின் கால்ஷீட் குதிரை கொம்பாக உள்ளது. ஏனென்றால் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் யோகி பாபு தான் காமெடி நடிகராக இருந்தார்.

Also Read : பிழைப்புக்காக திரித்து பேசுவாங்க.. வெளுத்து வாங்கிய துணிவு பட இயக்குனர் எச்.வினோத்

இது தவிர ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் வினோத் யோகி பாபுவை வைத்து ஒரு படம் எடுக்க உள்ளாராம். இதுவரை டென்ஷனாக வேலை பார்த்தது போதும் என கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக காமெடி ஜானரில் வினோத் இந்த படத்தை எடுக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை முடித்துவிட்டு தான் வினோத் கமலுடன் இணைய உள்ளார். மேலும் யோகி பாபு, வினோத் கூட்டணியில் உருவாகும் படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது. வினோத் இதுவரை ஆக்சன் படங்களாக எடுத்து வந்த நிலையில் இந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Also Read : உச்சகட்ட வளர்ச்சியால் ஆணவத்தில் ஆடும் யோகி பாபு.. விஷால், உதயநிதியை சேர்த்து அசிங்கப்படுத்திய மேடை

Advertisement Amazon Prime Banner