திரிஷா விஷயத்தில் அலர்ட் ஆறுமுகமாயிருக்கும் விக்ரம்.. முத்துன கத்திரிக்காய்க்கும் மவுஸ் குறையல!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷன் வேலைகளுக்காக படக்குழு இந்தியா முழுவதும் சோழர்கள் பயணம் என்ற பெயரில் விசிட் அடித்து வருகின்றனர். அங்கு ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சுவாரஸ்யமாக பதிலளித்து வருகிறார்கள்.

நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, விக்ரம் போன்றவர்களிடம் ரசிகர்கள் தங்களுடைய கேள்விகளை கேட்டு வருகின்றனர். மேலும் லியோ படத்தின் அப்டேட், தங்கலான் படத்தின் அப்டேட் போன்றவற்றையும் கேட்டு வருகின்றனர். சமீபத்திய விழா ஒன்றில் நடிகர் விக்ரமிடம், திரிஷாவை பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் அளித்த பதில் ரொம்பவும் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

Also Read:500 கோடி லாபத்தை வைத்து கணக்கு போட்ட விக்ரம்.. வசமாக சிக்கிக் கொண்ட தயாரிப்பாளர்

சீயான் விக்ரமும், நடிகை திரிஷாவும் ஏற்கனவே சாமி, பீமா போன்ற படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரது ஜோடி சினிமா ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. மேலும் அந்த சமயங்களில் இருவரும் நெருங்கி பழகுவதாக கூட வதந்திகள் கிளம்பின. அதன் பின்னர் பல வருடம் கழித்து தான் விக்ரம் மற்றும் திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடிக்கும் விக்ரமுக்கு, குந்தவை கேரக்டரில் இருக்கும் திரிஷா தங்கை. இதுபற்றி ரசிகர்கள், உங்கள் இருவரது கெமிஸ்ட்ரியும் எப்போதுமே சூப்பராக இருக்கும். ஆனால் தற்போது ஏன் நீங்கள் இருவரும் அண்ணன் தங்கையாக நடிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதறிப் போய் பதிலளித்த விக்ரம் இந்த படத்தில் மட்டும் தான் திரிஷா எனக்கு தங்கை என்று சொல்லி இருக்கிறார்.

Also Read:உயிரைக் கொடுத்து நடிச்சும் பிரயோஜனம் இல்லாமல் போன விக்ரமின் 5 படங்கள்.. சியானை பதம் பார்த்த கோப்ரா

இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் தொடங்கியதில் இருந்தே வந்தியதேவனாக நடிக்கும் கார்த்தி மற்றும் குந்தவையாக நடிக்கும் திரிஷா இவர்கள் இருவரையும் வைத்து நிறைய மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டிருந்தன. மேலும் ஆழ்வார்கடியான் நம்பியாக நடிக்கும் ஜெயராமும் இவர்களை ட்ரோல் செய்திருப்பார். திரிஷாவுக்கு பொன்னியின் செல்வனுக்கு பிறகு மார்க்கெட் கொஞ்சம் ஏற ஆரம்பித்திருக்கிறது.

இதனால் திரிஷா மீண்டும் கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த நேரத்தில் இவர்கள் இருவரையும் அண்ணன் தங்கை என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து போன விக்ரம் சுதாகரித்துக் கொண்டுதான் இப்படி ஒரு பதிலை சொல்லி இருக்கிறார். இவர்கள் இருவரும் அடுத்து வரும் படங்களில் ஜோடியாகவும் நடிக்க வாய்ப்புகள் உள்ளது.

Also Read:57 வயதில் விக்ரமின் அசர வைக்கும் சொத்து மதிப்பு.. தோல்வி துரத்தினாலும் வருடத்திற்கு இவ்வளவு சம்பளமா?

Next Story

- Advertisement -