உயிரைக் கொடுத்து நடிச்சும் பிரயோஜனம் இல்லாமல் போன விக்ரமின் 5 படங்கள்.. சியானை பதம் பார்த்த கோப்ரா

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலஹாசனுக்கு அடுத்ததாக தனது படங்களில் அதிக கெட்டப் போட்ட நடிகர் என்றால் அது சியான் விக்ரம் தான். அந்த அளவிற்கு தனது பங்களிப்பை முழுமையாக கொடுக்கக் கூடியவர் ஆவார். இப்படியாக தனது நடிப்பின் மூலம் உடலை வருத்தி பல வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார். ஆனால் விக்ரம் தனது உழைப்பிற்கு தீனி போட்டும் அங்கீகாரம் கிடைக்காமல் போன நான்கு படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

தெய்வத்திருமகள்: ஏ எல் விஜய் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தெய்வத்திருமகள். இதில் விக்ரம், அமலாபால், சாரா, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் விக்ரம் மனநலம் குன்றியவராக கிருஷ்ணா என்னும் கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் இப்படம் ஆனது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறாமல் போனது.

Also Read: விக்ரம் உயிரைக் கொடுத்து நடித்து வெற்றி கண்ட 5 படங்கள்.. வேற லெவலில் உருவாகி இருக்கும் தங்கலான்

: சங்கர் இயக்கத்தில்  2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஐ. இதில் விக்ரம் உடன் எமி ஜாக்சன், சுரேஷ் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் விக்ரம் பாடி பில்டராக லிங்கேஸ்வரன் என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். அதிலும் வில்லன்கள் செய்த சதியால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார். இப்படத்தில் அந்த அளவிற்கு தனது உடலை வருத்தி அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் இப்படம் நல்ல வரவேற்பை பெறாமல் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்தது.

கந்தசாமி: சுசி கணேசன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கந்தசாமி. இதில் விக்ரம் உடன் ஸ்ரேயா சரண், பிரபு, வடிவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் விக்ரம் சிபிஐ அதிகாரியாக கந்தசாமி என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். அதிலும் கந்தசாமி கெட்டப், பெண் கெட்டப் என பல்வேறு வேடங்களில் மாஸ் காட்டி இருப்பார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான நிலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காமல் போனது.

Also Read: 57 வயதில் விக்ரமின் அசர வைக்கும் சொத்து மதிப்பு.. தோல்வி துரத்தினாலும் வருடத்திற்கு இவ்வளவு சம்பளமா?

கோப்ரா: ஆர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோப்ரா. இதனைத் தொடர்ந்து விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான கோப்ரா ஆக்சன் திரில்லர் படமாக வெளியானது. இதில் விக்ரம் உடன் இர்பான் பதான், ரோஷன் மேத்யூ, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படமானது வெளிநாடுகளில் நடக்கும் கொள்ளை சம்பவம், கொலை போன்றவற்றை மையமாக வைத்து படத்தின் கதையானது அமைந்துள்ளது. மேலும் இப்படத்திற்காக விக்ரம் தனது உடலை வருத்தி பல கெட்டபகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம்.

ராவணன்: மணிரத்தினம் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராவணன். இதில் விக்ரம் உடன் ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ், கார்த்திக், பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் விக்ரம் மலையோர பழங்குடியின மக்களில் ஒருவராக வீரா எனும் கேரக்டரில் நடித்திருப்பார். அதிலும் தனது உழைப்பிற்கு போட்ட தீனிக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போன படமாக அமைந்தது.

Also Read: சீயான் விக்ரமின் பிறந்தநாளுக்கு காத்திருக்கும் செம ட்ரீட்.. தங்கலான் கொடுக்கப் போகும் அப்டேட்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்