116 நாட்கள் ஷூட்டிங் நிறைவடைந்தது.. பரபரப்பு கிளப்பிய தங்கலான் ரிலீஸ் அப்டேட்

Thangalaan Movie Release Update: பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் வயதான மற்றும் 30 வயது இளமையான தோற்றம் என இரண்டு விதமான கெட்டப்பில் நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் தங்கலான். இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்பது தற்போது வெளியாகி உள்ளது. 40களில் கேஜிஎப்-இல் வாழ்ந்த பழங்குடி மக்களை பற்றி பேசுகிற படம் தான் தங்கலான்.

இந்தப் படத்திற்காக விக்ரம் ரொம்பவே மெனக்கெடுக்கிறார். அதிலும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விக்ரமிற்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை அடுத்து ஓய்வில் இருந்த விக்ரம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

Also Read: கமலின் பெரிய ரசிகன் யார்.? லோகேஷை ஓரங்கட்டி மாஸ் காட்டிய இயக்குனர்

கிட்டத்தட்ட 116 நாட்கள் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், விரைவில் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்து கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகளை துவங்க பட குழு திட்டமிட்டுள்ளனர். இந்த சமயத்தில் தங்கலான் படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

விக்ரமுக்கு மட்டும் விபத்து ஏற்படவில்லை என்றால் படத்தை சீக்கிரம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருந்தது. அவர்கள் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்திருந்தால் இந்த வருட இறுதியில் படத்தை ரிலீஸ் செய்யும் முடிவில் இருந்தனர்.

Also Read: பேரை வாடகைக்கு வாங்கி நடித்த 5 ஹீரோக்கள்.. சீயானை ஓரம் கட்டி கூகுளில் இடம் பிடித்த கமலின் விக்ரம்

ஆனால் இடையில் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போனதால் வரும் பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. இந்த வருட பொங்கலுக்கு வாரிசு, துணிவு போன்ற இரண்டு படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு திரையரங்கை ரணகளம் செய்தது.

அதேபோல வரும் 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையும் தங்கலான் ரிலீஸ் ஆல் தாறுமாறாக இருக்கப் போகிறது. மேலும் இந்த படத்தை பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். படத்தின் இயக்குனர் பா ரஞ்சித்தும் இந்த படத்தை ஆஸ்காருக்கு அனுப்ப திட்டமிட்டு இருக்கிறார்.

Also Read: மணிரத்தினம் படத்தில் மாதவனுக்கு அடித்த ஜாக்பாட்.. மனசார விட்டுக் கொடுத்த நடிகர்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்