Tamil Cinema News | சினிமா செய்திகள்
கமலின் பெரிய ரசிகன் யார்.? லோகேஷை ஓரங்கட்டி மாஸ் காட்டிய இயக்குனர்
ஆனால் அவரே இப்போது ஒரு இயக்குனரை கமலின் ரசிகர் இவர்தான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

Actor Kamal: உலக நாயகனாக கலக்கும் கமலுக்கு கோடி கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் பல சினிமா பிரபலங்கள் இவரின் தீவிர ரசிகனாக இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனர் ஒருவர் மிகச்சிறந்த Fan Boy நான் தான் என நிரூபித்துள்ளார்.
இதுவரை லோகேஷ் தான் கமலின் தீவிர வெறியன் என்று நாம் நினைத்திருந்தோம். அதற்கேற்றார் போல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ என்ட்ரி கொடுத்த ஆண்டவருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய படம் தான் விக்ரம். இதற்கு லோகேஷ் ஒரு முக்கிய காரணம் என்பதை நம்மால் மறுக்க முடியாது. ஆனால் அவரே இப்போது ஒரு இயக்குனரை கமலின் ரசிகர் இவர்தான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
அந்த இயக்குனர் வேறு யாரும் கிடையாது கமலை வைத்து வேட்டையாடு விளையாடு என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த கௌதம் வாசுதேவ் மேனன் தான். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் அப்போதே 50 கோடி வரை வசூலித்து மாஸ் காட்டியது. அதிலும் டி சி பி ராகவனாக கமலின் நடிப்பு இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அப்படிப்பட்ட படம் இப்போது மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் படம் திரையிட்ட அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ் ஃபுல் ஆகி கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது. இப்படத்துடன் வெளியான புது படங்கள் அனைத்தையும் ஓரம் கட்டும் அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக கிடைத்து வருகிறது.
Also read: வரப்போகுது பிக்பாஸ் சீசன் 7.. சண்டைக்கோழிகளாக சீறப்போகும் பிரபலங்களின் லிஸ்ட் இது தான்
இதைத்தொடர்ந்து கமலின் ரசிகர் யார் என்ற சண்டையில் கௌதம் மேனன் முதலிடம் பிடித்துள்ளார். சாரி லோகேஷ் ப்ரோ என ஒரு ரசிகர் குறிப்பிட்டு இருந்தார். உடனே லோகேஷ், சந்தேகமே வேண்டாம் அவர்தான் எனக் கூறியதை தொடர்ந்து கௌதம் மேனனும் ஒரு ரிப்ளை கொடுத்திருக்கிறார்.

gowtham-menon-tweet
அதாவது நாயகன் மீண்டும் வரான் என விக்ரம் படம் வரும் வரை நான் அந்த இடத்தில் இருந்தேன். ஆனால் இப்பொழுது நீங்கள் தான் இருக்கிறீர்கள். அந்த இடத்தை பிடிக்க நான் முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் இந்த சண்டையில் சட்டை கிழியாது, அன்பு மட்டுமே என கூறியுள்ளார். இப்படி இவர்களின் கலகலப்பான உரையாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Also read: கவுண்டமணியை ஒதுக்கிய ரஜினி, கமல்.. திருப்பி அடித்த கர்மா
