மணிரத்தினம் படத்தில் மாதவனுக்கு அடித்த ஜாக்பாட்.. மனசார விட்டுக் கொடுத்த நடிகர்

Director Mani Ratnam Movie: காதலுக்கு தனி இலக்கணம் வகுத்து தன்னுடைய படங்களில் வித்தியாசம் காட்டும் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஒரு முறையாவது நடித்த விட வேண்டும் என இளம் நடிகர்கள் முதல் டாப் நடிகர்கள் வரை ஆசைப்படுகின்றனர். அப்படி மணிரத்தினத்தின் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பிரபல நடிகர் மாதவனுக்கு மனசார விட்டுக் கொடுத்திருக்கிறார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு சூர்யா, சித்தார்த், மாதவன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஆய்த எழுத்து. தமிழிலும் ஹிந்தியிலும் ஒரே நேரத்தில் வெவ்வேறு நடிகர்களை வைத்து மணிரத்தினம் இந்த படத்தை இயக்கி வெளியிட்டார்.

Also Read: 9 வருடத்திற்கு முன்பே மணிரத்தினத்தின் படத்தை தவறவிட்ட கார்த்தி.. டிராக் மாறிபோய் ரூட்டை பிடித்த வந்தியத்தேவன்

இந்த படத்தில் நெகட்டிவ் ஷேடில் இன்பா என்ற கேரக்டரில் மாதவன் நடித்து அசத்தினார். ஆனால் இந்த கேரக்டரில் நடிப்பதற்கு முதலில் மணிரத்தினம் சியான் விக்ரம் தான் தேர்வு செய்து இருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் சியான் விக்ரம் நிறைய படங்களில் கமிட்டாகி இருந்ததால் கால் சீட் பிரச்சினை காரணமாக அந்த வாய்ப்பு மாதவனுக்கு வந்து சேர்ந்தது.

ஆனால் மாதவன் இந்த படத்தில் இன்பாவாக சூப்பராகவே நடித்திருப்பார். இருப்பினும் விக்ரம் நடித்திருந்தால் இதைவிட இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும். இந்த வாய்ப்பை மாதவனுக்கு கொடுக்கும்படி சியான் விக்ரம் மணிரத்தினிடம் பரிந்துரைத்திருக்கிறார்.

Also Read: மாதவன் ராசி இல்லாத நடிகர் என்று ஒதுக்கிய 5 நடிகைகள்.. சாக்லேட் பாயாக இருந்தாலும் நோ சொன்ன ஹீரோயின்

அதன் பிறகு மணிரத்தினமும் மாதவனை இந்த படத்திற்காக உடலை ஏற்ற சொல்லியிருக்கிறார். பின் டெஸ்ட் சூட் நடத்தி இன்பா கதாபாத்திரத்திற்கு மாதவன் ஒத்து வருவார் என நம்பிய பிறகுதான் அந்த படத்தில் அவரை நடிக்க வைத்திருக்கிறார்.

இருப்பினும் மணிரத்தினம் மனதில் இன்பா கேரக்டரை விக்ரமை வைத்து தான் உருவாக்கினார். அவர் நினைத்தது போல் விக்ரம் மட்டும் இன்பாவாக நடித்திருந்தால் இன்னுமும் இந்த படம் சூப்பராக இருந்திருக்கும் என இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்கின்றனர்.

Also Read: பேரை வாடகைக்கு வாங்கி நடித்த 5 ஹீரோக்கள்.. சீயானை ஓரம் கட்டி கூகுளில் இடம் பிடித்த கமலின் விக்ரம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்