திருமணத்திற்கு பின் கசந்து போகும் காதல்.. வாழ்க்கையை கற்று கொடுக்கும் இறுகப்பற்று முழு விமர்சனம்

Irugapatru Movie Review: இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் கடந்த மாதம் ஆறாம் தேதி இறுகப்பற்று திரைப்படம் ரிலீஸ் ஆனது. விக்ரம் பிரபு, விதார்த், அபர்ணதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தியேட்டரில் மட்டுமில்லாமல் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் பொழுது கூட ரசிகர்கள் பெரிய அளவில் இந்த படத்தை கொண்டாடுகிறார்கள்.

ரங்கேஷ் (விதார்த்) மனைவி பவித்ரா (அபர்ணதி) திருமணம் ஆகி குழந்தை இருக்கும் தம்பதி. அர்ஜுன் (ஸ்ரீ), திவ்யா (சானியா அய்யப்பன்) காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி. மித்ரா(ஷ்ரத்தா ஸ்ரீநாத்), மனோகர் (விக்ரம் பிரபு) இருவரும் பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்த தம்பதி. இவர்களது வாழ்க்கையில் நடக்கும் இயல்பான விஷயம்தான் இறுகப்பற்று படத்தின் கதைக்களம்.

ரங்கேஷுக்கு, மனைவி பவித்ரா குழந்தை பிறந்த பின் குண்டானது பிடிக்கவில்லை. தான் எதிர்பார்த்ததை போல் மனைவி இல்லை என்பதால் அவரிடம் விவாகரத்து பெற நினைக்கிறார். அர்ஜுன் மற்றும் திவ்யா காதலித்து திருமணம் செய்திருந்தாலும், இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது, திவ்யா காதலுக்காக ஏங்குகிறார். இந்த இரண்டு தம்பதிகளுக்கும் மனரீதியாக கவுன்சிலிங் கொடுக்கும் ஆலோசகராக மித்ரா இருக்கிறார்.

Also Read:கமல் ரஜினிக்காக அடித்துக் கொள்ளும் சந்தானம்.. 80ஸ் பில்டப் அலப்பறையான டீசர்

மித்ரா இந்த கவுன்சிலிங் ஆலோசகராக இருப்பதால், அவருக்கும் மனோகருக்கும் இடையே சின்ன பிரச்சனை வந்தாலும் அதை உளவியல் ரீதியாக யோசித்து முன்னரே தடுக்க நினைப்பது அந்த தம்பதிகளுக்குள் பிரச்சனையாக அமைந்து விடுகிறது. பொருளாதாரம், மன அழுத்தம், சுற்றி இருக்கும் சூழ்நிலை திருமணமானவர்களின் காதலை எப்படி மாற்றுகிறது என்பதை படம் முழுக்க எதார்த்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

கணவன் மனைவி ஒருவரை ஒருவர் மட்டும் தட்டுவது, தங்களுடைய ஏமாற்றத்தை வெறுப்பாக துணை மீது காட்டுவது, துணையின் எதார்த்த வாழ்வியலை ஏற்க மறுப்பது போன்றவை தான் கணவன் மனைவிக்குள்ளே ஏற்படும் பிரச்சனைக்கு காரணம் என வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது இந்த படம். படத்தின் வசனங்கள் மிகப்பெரிய தூணாக வெற்றிக்கு உதவி இருக்கிறது.

திகட்ட திகட்ட காதலித்த ஒருவரை எப்படி அவ்வளவு சீக்கிரம் வெறுத்து விட முடியும், திருமணத்திற்கு பின்னான காதல் கசப்பதற்கான உண்மை காரணம் என்ன என்பதை எதார்த்த வாழ்வியலோடு பேசி இருக்கிறது இறுகப்பற்று படம். இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொரு ஜோடியும், தங்களுடைய சுய வாழ்வை பரிசீலித்து பார்ப்பதற்கான வாய்ப்பாக இந்த படம் அமைந்திருக்கிறது.

Also Read:சந்தானம் பாணியில் களம் இறங்கிய சதீஷ்.. சுந்தர் சி-யை மிஞ்சும் காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரெய்லர்