17 நாட்களில் விக்ரம் படைத்த வசூல் சாதனை.. பின்னுக்குத் தள்ளப்பட்ட பாகுபலி 2

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், பஹத் பாசில் விஜய், சேதுபதி, நரேன், சூர்யா, மைனா நந்தினி, மகேஸ்வரி, காயத்ரி, ஷிவானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன்3-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆன விக்ரம் திரைப்படம் படக்குழு எதிர்பார்த்ததைவிட வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.

120 கோடி பொருட்செலவில் உருவான விக்ரம் திரைப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தால்ட தயாரிக்கப்பட்டதால் படத்திற்கு கிடைத்த வெற்றியை கமலஹாசன் தாறுமாறாக கொண்டாடி வருகிறார். திரையரங்கில் தொடர்ந்து 17-வது நாளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் விக்ரம் படம் சர்வதேச அளவில் 365 கோடி வசூலை வாரிக் குவித்திருகிறது.

தமிழகத்தில் மட்டும் கடந்த 17 நாட்களில் 160 கோடியை தாண்டியுள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத வகையில் தமிழகத்தில் முன்னதாக ரூபாய் 152 கோடி வசூல் சாதனை செய்து முதல் இடத்தில் இருந்த பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை 17 நாட்களில் முறியடித்து விக்ரம் படம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது.

தமிழகத்தில் மட்டுமின்றி அமெரிக்காவிலும் விக்ரம் திரைப்படம் அதிகமான வசூலை குவித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. அமெரிக்காவில் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் ரூபாய் 120 கோடிக்கு மேல் விக்ரம் திரைப்படம் இதுவரை வசூலை வாரி குவித்து இருக்கிறது.

இதனால் படக்குழுவினருக்கு கமலஹாசன் கார் பைக் ரோலக்ஸ் வாட்ச் இதைத் தாண்டி தற்போது விக்ரம் படத்திற்கான சக்சஸ் மீட் நடைபெற்றபோது அதில் பங்கேற்ற படக்குழுவினருக்கு தடபுடலான 40 வகை சைவ அசைவ விருந்தை சென்னையிலுள்ள ரேஸ் கோர்சில் வழங்கினார். இதுகுறித்த வீடியோ சோசியல் மீடியாவில் தற்போது  ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.

மேலும் கமல்ஹாசன் நடிப்பில் இதுவரை வெளியான எல்லா படங்களை காட்டிலும் விக்ரம் திரைப்படம் வசூலில் பின்னிப் பெடல் எடுப்பதால் இவ்வளவு நாள் கிடைக்காத பெருமை இந்தப் படத்தின் மூலம் கமலுக்கு கிடைத்து  ரஜினி, அஜித், விஜய் வரிசையில் கமலையும் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக மாற்றியுள்ளது.

Next Story

- Advertisement -