விஜய்யின் அந்த படம் கண்டிப்பா வராது.. சூடம் ஏத்தி சத்தியம் செய்யும் பிரபல இயக்குனர்

vijay69-stills
vijay69-stills

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி பாதியில் கைவிட்ட படம் மீண்டும் தொடங்கப்படுவதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லை என அழுத்தம் திருத்தமாக தெரிவித்து விட்டார் அந்த படத்தின் இயக்குனர்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர். பொங்கலை முன்னிட்டு வெளியாகும் மாஸ்டர் படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்புகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி போல ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி தான் தளபதி விஜய் மற்றும் கௌதம் மேனன். கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சில நாட்கள் படமாக்கப்பட்ட திரைப்படம் யோகன் அத்தியாயம் ஒன்று.

அதுவரை வந்த விஜய் படங்களிலேயே வித்தியாசமான அதிரடி படமாக உருவாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் யோகன் அதியாயம் ஒன்று படத்தின் போஸ்டர்களும் இணையத்தில் செம வைரலாக பரவியது. ஆனால் திடீரென அந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இதனை தளபதி ரசிகர்களால் கொஞ்சம் கூட ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் வருங்காலத்தில் இந்த படம் உருவாகும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் சமீபத்தில் கௌதம் மேனன் கொடுத்த பேட்டி ஒன்றில் யோகன் அத்தியாயம் ஒன்று படம் இனி வருவதற்கு வாய்ப்பே இல்லை என தெளிவாக தெரிவித்துவிட்டார். இதனால் இந்த கூட்டணி இப்போதைக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Advertisement Amazon Prime Banner