நேரம் சரியில்லாத லைக்காவிடம் மல்லுக்கட்டும் சன் பிக்சர்ஸ்.. விஜய் சேதுபதி நம்பி கொடுத்த கால்ஷீட்

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா பெரிய நடிகர்களின் படங்களை இயக்கி வருகிறது. ஆனால் சமீபகாலமாக இந்த நிறுவனம் மிகுந்த சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. லால் சலாம் எதிர்பார்த்த வசூலை கொடுக்கவில்லை.

அதோடு அஜித், லைக்கா கூட்டணியில் உருவாகும் விடாமுயற்சி படம் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது. இந்தப் படத்தை ரிலீஸ் செய்தார்கள் என்றால் ஓரளவு லைக்கா நல்ல லாபத்தை பார்க்க வாய்ப்புண்டு. ஆனால் விடாமுயற்சி படப்பிடிப்பு இன்னும் போய்க்கொண்டிருக்கிறது.

இவ்வாறு லைக்கா நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறது. அதாவது இது சிறிய பட்ஜெட் படம் என்பதால் லைக்கா கமிட் செய்து உள்ளது.

பாண்டிராஜ் உடன் கூட்டணி போடும் விஜய் சேதுபதி

ஆனால் விஜய் சேதுபதியின் கால்ஷூட் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் இடமும் இருக்கிறது. மேலும் சன் பிக்சர்ஸ் இப்போது பெரிய பட்ஜெட் படங்களை தான் தயாரித்து வருகிறது. லோகேஷ் மற்றும் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்தை தயாரிக்கிறது.

அதேபோல் விஜய் சேதுபதியின் படமும் பிரம்மாண்டமாக எடுக்கப்படுவதால் கண்டிப்பாக கால்ஷூட்டில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதோடு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பதால் அந்த தேதிகளில் மாற்றம் ஏற்படலாம்.

மேலும் பாண்டிராஜ் படத்திற்கு முன்னதாகவே சன் பிக்சர்ஸ் விஜய் சேதுபதியின் படத்தை வெளியிட்டால் சிறிய பட்ஜெட் படம் எந்த அளவுக்கு பேசப்படும் என்பது கேள்விக்குறிதான். இவ்வாறு சன் பிக்சர்ஸால் பல பிரச்சனையே லைக்கா சந்திக்க இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்