நவீனை உசுப்பேத்தி விட்டு ரணகளம் படுத்தும் விஜய்.. ராகினி போட்ட பிளானில் சிக்க போகும் காவேரி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் காவேரி இருவரும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் அடிக்கடி ஒப்பந்தத்தின்படி கல்யாணம் பண்ணதை பற்றி பேசி அவர்களை ஏமாற்றிக் கொள்கிறார்கள். அத்துடன் காவிரிக்கு எந்தவித பிரச்சினையும் வரவிடாமல் தடுக்கும் பொறுப்பாக விஜய் பாதுகாத்து வருகிறார்.

அதே மாதிரி விஜய்க்கு மற்றும் குடும்பத்திற்கும் எந்தவித கெட்ட பேரும் வந்து விடக்கூடாது என்ற விஷயத்தில் காவிரியும் கவனமாக இருக்கிறார். இதனை தொடர்ந்து காவிரி தன்னுடைய குடும்பத்தில் பண்ணும் அப்பளக்கட்டு பிசினஸில் விஜய்யை பயன்படுத்தி மார்க்கெட்டிங் பண்ணி விட்டார். இது தெரிந்து கோபப்பட்ட விஜய்யை காவேரி சமாதானப்படுத்திய நிலையில் அமைதியாகிவிட்டார்.

காவிரி நினைத்து கனவு காண்கும் நவீன்

இதையெல்லாம் தொடர்ந்து நவீன், விஜய்யை ஒரு நல்ல நண்பராகவும் ஜென்டில்மேன் ஆகவும் பார்த்து வருகிறார். அந்த வகையில் அவரை வைத்து மார்க்கெட்டிங் பண்ண நினைக்கும் காவிரி கொடுத்த வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது நவீன் நண்பர் ஒருவர், விஜய் பற்றி அவதூறாக பேசுகிறார்.

அதற்கு நவீன், விஜய் அப்படியெல்லாம் கிடையாது. ரொம்பவே நல்ல மனுசர் என்று சொல்லிக்கொண்டு ஒரு நாளில் விஜய் எதார்த்தமாக இன்னும் பத்து மாதம் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் நீங்கள் காதலித்த காவிரி உங்களுக்கு திரும்பவும் கிடைத்து விடுவார் என்று சொன்ன விஷயத்தை நினைத்து சிரித்துக் கொள்கிறார்.

அந்த வகையில் விஜய் எப்போதோ ஒரு ஞாபகத்தில் நவீன் இடம் சொன்னதை நினைத்து நவீன் காவிரி எப்படியும் நம்முடன் சேர்ந்து விடுவார் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி நவீனை உசுப்பேத்தி விட்டு பேசியதால் விஜய்யை முழுமையாக நம்புகிறார். ஆனால் விஜய் மனதிற்குள் காவேரி நுழைந்துவிட்டார் காவேரி மனதிற்குள் விஜய் இருக்கிறார் என்பதை நவீன் புரிந்து கொள்ளவில்லை.

இதில் வேற காவிரி, யமுனாவிடம் உனக்கும் நவீனுக்கும் நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்ற வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இப்படி ஒரு சிக்கலில் அனைவரும் இருக்கும் நிலையில் ராகினி எதிர்பார்ப்பது காவிரி வாழ்க்கையில் பிரச்சனை பண்ண வேண்டும் என்பதுதான். அதற்கு ஏற்ற மாதிரி நவீன் மனதில் இன்னும் காவேரி தான் இருக்கிறார் என்பது தெரிந்து விட்டால் இதை வைத்தே ராகினி கலகத்தை உண்டாக்குவார்.

அத்துடன் காவேரி மற்றும் விஜய் ஒப்பந்தத்தின்படி தான் கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள் என்று தெரிந்தால் நிச்சயம் காவேரி, ராகினிடம் சிக்கிக் கொள்வார். இதையெல்லாம் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் விஜய் மற்றும் காவிரி மனதுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்தி உண்மையான கணவன் மனைவிகளாக வாழ்ந்து வந்தால் நவீன் மற்றும் ராகினிக்கு சரியான பதிலடியாக இருக்கும்.

மகாநதி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -