புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மக்களை அடுத்தடுத்து முட்டாளாக்கும் விஜய் டிவி.. லாஜிக் இல்லாமல் அட்டூழியம் செய்யும் ராஜா ராணி சீரியல்

விஜய் டிவி சீரியல்களுக்கு எப்போதுமே நேயர்களிடையே கொஞ்சம் நல்ல வரவேற்பு உண்டு. ஆனால் சமீப காலமாக சீரியல் என்ற பெயரில் விஜய் டிவி செய்யும் அட்டூழியம் ரொம்பவே அதிகம் ஆகிவிட்டது. கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் இவர்கள் எடுக்கும் காட்சிகள் சீரியலை விரும்பி பார்ப்பவர்களை கூட பயங்கர கடுப்பேற்றி வருகிறது.

இந்த சீரியலின் இயக்குனர் ஏற்கனவே பாரதி கண்ணம்மா நாடகத்தின் மூலம் வெறுப்பேற்றுவது பத்தாது என்று இப்போது ராஜா ராணி சீரியலிலும் தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டார். சந்தியா போலீஸ் ட்ரைனிங் அகாடமிக்கு சென்றதிலிருந்து இந்த நாடகத்தில் ஒவ்வொரு எபிசோடும் பயங்கர அக்கப்போர் தான்.

Also Read: ஆலியாவின் மாமியாரா இது.? இளம் வயதில் பீச்சில் ரொமான்ஸ் செய்யும் வீடியோ.!

அதாவது போலீஸ் ட்ரைனிங் சந்தியாவுக்கு தெரிந்தது கூட அங்கு இருக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியவில்லை என்பது போன்று இவர் எழுதும் காட்சிகள் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்வது போல் இல்லை. இதில் தீவிரவாதிகள் வைத்திருக்கும் வெடிகுண்டை சந்தியா ஒரு ஆள் மட்டும் எல்லா இடத்திற்கும் சென்று வெடிக்க விடாமல் செய்வது போன்று எடுக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் ரொம்பவே அபத்தமாக இருந்தது.

இது பத்தாது என்று சந்தியாவின் கணவரான சரவணன் சொல்வதை எல்லாம் கேட்டு போலீஸ் அதிகாரிகள் செயல்படுவது போல் எடுத்திருக்கும் காட்சி பார்ப்பவர்களேயே கடுப்பேற்றுகிறது. அத்தனை காவலர்கள் இருக்கும்பொழுது சந்தியா தலைமையில் பயிற்சியில் இருப்பவர்கள் தீவிரவாதிகளிடமிருந்து காவல் அதிகாரியை மீட்க செல்வது போன்று எடுக்கப்பட்டிருப்பது கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்வது போல் இல்லை.

Also Read: சீரழியும் சின்னத்திரை, முத்த காட்சியில் சந்தி சிரித்த ராஜா ராணி.. சிங்கிள்ஸ் சாபம் உன்ன சும்மா விடாதுடா ஆதி!

இதில் சமீபத்திய எபிசோடில் கன்னிவெடியை தெரியாமல் மிதித்து விடும் அப்துல்லை சந்தியா காப்பாற்ற செய்யும் பிளான் அறிவியலுக்கு சவால் விடும் விதமாகவே அமைந்திருக்கிறது. என்னதான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நாடகத்தை எடுத்தாலும் அதற்காக இப்படி ஒரேயடியாக மக்களை ஏமாற்றுவது எல்லாம் ரொம்பவே ஓவர்.

ஏற்கனவே இந்த நாடகத்தின் இயக்குனர் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிவியலுக்கும், மருத்துவத்திற்கும் சவால் விட்டார். இப்போது இந்த சீரியல் மூலம் ஒட்டுமொத்த காவல்துறைக்குமே எதுவுமே தெரியாது என்பது போல் எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த எபிசோடுகள் எல்லாம் காவல்துறை சார்ந்தவர்கள் கண்ணில் மாட்டாமல் இருக்கும் வரை சரி.

Also Read: ஆபாசமாக சித்தரித்து புகைப்படம்.. ராஜா ராணி 2 நடிகையின் பகீர் குற்றச்சாட்டு!

- Advertisement -

Trending News