வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

தொடர்ந்து 3 மணி நேரம் ஒளிபரப்பாகும் கிளைமாக்ஸ் காட்சி.. டிஆர்பி இல்லாததால் ஊத்தி  மூட போகும் விஜய் டிவி

Vijay Tv Serial: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு டிஆர்பி என்பது ரொம்பவே முக்கியம். அப்படி டிஆர்பி இல்லாத சீரியல்களை தனியார் தொலைக்காட்சி ஊத்தி மூடுவதற்கு தயக்கம் காட்டுவதில்லை. அப்படிதான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபல சீரியல் இந்த வருட பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்டு வெறும் 115 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாக இருக்கிறது.

அதற்குள்ளேயே அந்த சீரியலுக்கு எந்த கார்ட் போடும் முடிவுக்கு விஜய் டிவி வந்துள்ளது. ஏனென்றால் இந்த சீரியலுக்கு கடந்த சில  வாரங்களாகவே டிஆர்பி கிடைக்காததால் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கின்றனர். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு என்றே ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருந்தது. அதனால் இதன் முதல் பாகம் நிறைவடைந்த உடனேயே இரண்டாம் பாகத்தை துவங்கினர்.

Also Read: பாக்கியலட்சுமி கதையை கொண்டு வரும் எதிர்நீச்சல் சீரியல்.. நந்தினிக்கு காத்திருக்கும் புது ட்விஸ்ட்

முதல் பாகத்தில் கண்ணம்மாவாக நடித்த வினுஷா தேவி, இரண்டாம் பாகத்தில் சித்ரா என்ற கேரக்டரில் கதாநாயகியாக நடித்தார். பாரதியாக ரோஜா சீரியலின் கதாநாயகன் சிபு நடித்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் இந்த சீரியலில் காதலித்து தற்போது குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் பாரதியின் அம்மா சௌந்தர்யாவிற்கு இந்த திருமணம் சுத்தமாகவே பிடிக்காததால் அவர்களை வீட்டுக்குள் விடாமல் வெளியில் தங்க வைத்திருக்கிறார். அத்துடன் பாரதியின் தந்தை தான் கண்ணம்மாவின் கடந்த கால வாழ்க்கையை சீரழித்தவர் என்பது சஸ்பென்ஸ் ஆகவே இருக்கிறது.

Also Read: டிஆர்பி இல்லாததால் ஊத்தி மூடும் விஜய் டிவியின் நிகழ்ச்சி.. பட்ட அசிங்கம் எல்லாம் போதும்

ஆனால் அந்த சஸ்பென்ஸ் இந்த வார இறுதியில் உடைத்து சீரியலை நிறைவு செய்யப் போகின்றனர். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று பாரதி கண்ணம்மா 2 மெகா கிளைமாக்ஸ் மாலை 3 மணி முதல் 6:30 மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகிறது. இத்தனை நாள் கிடைக்காத டிஆர்பி ரேட்டிங் மொத்தமாக இந்த மூன்றரை மணி நேரத்தில் தட்டி தூக்க வேண்டும் என்ற திட்டத்துடன் விஜய் டிவி பிளான் பண்ணி இருக்கிறது.

மேலும் இந்த சீரியல் நிறைவடைந்து இதற்கு பதில் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் நடிக்கும் ‘கிழக்கு வாசல்’ என்ற புத்தம் புது சீரியலை விஜய் டிவி துவங்கப் போகிறது. எனவே இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பாரதி கண்ணம்மா 2 சீரியலின் தொடர்ந்து மூன்றரை மணி நேர கிளைமாக்ஸ் பார்ப்பது மட்டுமல்லாமல், புத்தம் புது  கிழக்கு வாசல் சீரியலை பார்ப்பதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read: விஜய் டிவி 8 சீரியல் நடிகைகளின் சம்பளத்தை கேட்டா தல சுத்துது.. முதலிடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்

- Advertisement -

Trending News