விஜய் டிவியின் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் உயிரை விட்ட 3 பிரபலங்கள்.. சூனியம் பிடிச்சதா இருக்கும் போல!

Vijay TV: சினிமா பிரபலங்களின் திடீர் மரணம் என்பது பொதுமக்களையும், மற்ற நட்சத்திரங்களையும் எப்போதுமே ரொம்பவும் பாதிக்கும் விஷயமாகவே இருக்கிறது. அப்படி தான் சமீபத்தில் மனோபாலா, மயில்சாமி போன்றோறது இறப்புகள் எல்லாம் இருந்தன. சமீபத்தில் இறந்த முக்கியமான இரண்டு பிரபலங்களின் மறைவுக்கு பின்னர் டிவி ஷோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற சேனல்களை விட விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதுமே மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. அதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் தான். இப்படி பேர் போன விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்று மூன்று நட்சத்திரங்களின் மரணத்திற்கு பொதுவான காரணமாக இருந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

Also Read:உயிரை காப்பாற்ற தானே மருத்துவமனைக்கு கார் ஓட்டிய மாரிமுத்து.. கடைசி நிமிடங்களில் நடந்தது இதுதான்

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் சமீப காலமாக எல்லோராலும் ரொம்பவும் ரசித்துப் பார்க்கப்படும் நிகழ்ச்சி தான் ஸ்டார்ட் மியூசிக். இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தேஷ் பாண்டே தொகுத்து வழங்குகிறார். முழுக்க முழுக்க தமிழ் சினிமா பாடல்களை மையமாகக் கொண்டு ரொம்பவும் கலகலப்பாக வழங்கப்படும் நிகழ்ச்சி தான் இது. சிரிப்புக்கு பேர் போன இந்த நிகழ்ச்சி மூன்று பிரபலங்களை காவு வாங்கி இருக்கிறது.

சன் டிவியின் மொத்த டிஆர்பிக்கும் காரணமாக இருந்த மாரிமுத்துவை எப்படியாவது விஜய் டிவி சீரியலில் நடிக்க வைக்க அந்த நிறுவனம் எவ்வளவோ முயற்சி செய்தது. எந்த திட்டமும் பலிக்காததால் கடைசியாக ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் அவரை கலந்து கொள்ள வைத்தது. இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் ஒளிபரப்பான நிலையில் இன்று அவர் இறந்திருக்கிறார்.

Also Read:57 வயது எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து மரணம்.. காரணம் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன திரையுலகம்

மாரிமுத்துவின் மறைவுக்கு சில நாட்களுக்கு முன் தான் பழம்பெரும் நடிகர் ஆர் எஸ் சிவாஜி மாரடைப்பால் மரணம் அடைந்தார். உலகநாயகன் கமலஹாசனின் நிறைய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த இவர், மாரிமுத்து கலந்து கொண்ட அதே எபிசோடில் கலந்து கொண்டவர் தான். நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஒரு சில நாட்களிலேயே இவர் இறந்திருக்கிறார்.

எதிர்நீச்சல் சீரியலுக்கு மாரிமுத்து எப்படியோ, அப்படித்தான் பாண்டியன் ஸ்டோர் ஆரம்பித்த புதிதில் முல்லை கேரக்டரில் நடித்த VJ சித்ராவும் அந்த நாடகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்றைய நள்ளிரவு தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டார். சித்ரா இறந்து சில வாரங்கள் கழித்து அந்த எபிசோடு கூட ஒளிபரப்பப்பட்டது.

Also Read:இந்தாம்மா ஏய், மாரிமுத்துக்கு நிகர் யாரு.? டிஆர்பி கிங்கின் மரணத்தால் சிக்கலில் சன் டிவி

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -