இந்தாம்மா ஏய், மாரிமுத்துக்கு நிகர் யாரு.? டிஆர்பி கிங்கின் மரணத்தால் சிக்கலில் சன் டிவி

Actor Marimuthu: இன்று இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியை கேள்விப்படுவோம் என்று நாம் நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டோம். அப்படி ஒரு மனதை கனக்க வைத்த மரண செய்தி வெளிவந்து ஒட்டுமொத்த திரையுலகையும் உலுக்கி இருக்கிறது. இந்தாம்மா ஏய் என்ற வசனத்தை உச்சரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

மிகப்பெரிய அளவில் வைரலான இந்த வசனத்திற்கு சொந்தக்காரர் தான் எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக வந்த மாரிமுத்து. தற்போது அவர் நம்மை விட்டு நீங்கி இருப்பது பெரும் துயரத்தை கொடுத்திருக்கிறது.

Also read: சும்மாவே எச்சி கைல காக்கா ஓட்டுவீங்க.. ஜனனியை பழிவாங்க குணசேகரன் செய்யும் மட்டமான வேலை

அதனாலேயே அவர் இல்லாத சீரியலை இனி எப்படி நாங்கள் பார்ப்போம் என்ற குரல்களும் இப்போது வருத்தத்தோடு ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலின் தூணாக மட்டுமல்லாமல் சன் டிவியின் டிஆர்பி கிங்காகவும் இருந்தார்.

அப்படிப்பட்டவரின் மரணம் சேனல் தரப்பையும் இப்போது கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதை வைத்து தான் அவர்கள் போட்டி சேனல்களுக்கு தண்ணி காட்டி வந்தனர். அப்படி இருக்கும்போது இனி அடுத்து என்ன செய்வது என்ற அவசர ஆலோசனையிலும் அவர்கள் இருக்கிறார்களாம்.

Also read: 57 வயது எதிர்நீச்சல் புகழ் மாரிமுத்து மரணம்.. காரணம் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன திரையுலகம்

ஏனென்றால் மக்கள் மனதில் ஆதி குணசேகரனாக நிலைத்து நின்ற மாரிமுத்துவுக்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியாது. எப்படிப்பட்ட ஜாம்பவானை அந்த கேரக்டரில் நடிக்க வைத்தாலும் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா என்பது மில்லியன் டாலர் கேள்விக்குறி தான்.

அதனாலேயே இப்போது சன் டிவி, சீரியல் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் மாரிமுத்துவுக்கு பதில் வேறு ஒரு நடிகரை களம் இறக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது. அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவர இருக்கிறது.

Also read: குணசேகரன் மரணத்தை முன்பே கணித்த ஜீவானந்தம்.. எதிர்நீச்சலில் இந்த காட்சியை கவனித்தீர்களா.?

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -