ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

எதிர்நீச்சலை காலி பண்ண விஜய் டிவி போட்ட பலே திட்டம்.. முக்கிய கேரக்டரை தூக்க நடந்த சதி

Ethirneechal Serial vs Vijay TV: சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல்களில் தற்போது எதிர்நீச்சல் சீரியல்தான் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் இந்த சீரியலுக்கு இலவசமாக பிரமோஷன் வழங்கும் அளவுக்கு பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. டிஆர்பி யில் எப்போதுமே முதலிடத்தில் இருக்கிறது.

இந்த சீரியலுக்கு எதிராக பல சேனல்களும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என களம் இறக்கியும் எதுவுமே எடுபடவில்லை. அதிலும் தற்போது ஜீவானந்தம், ஆதி குணசேகரன் சொத்தில் 40 சதவீத பங்கு சொத்துக்களை வாங்கிய பிறகு கதையில் விறுவிறுப்பு எகிறி விட்டது. அதிலும் சீரியஸான காட்சிகளில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஆதி குணசேகரன் காமெடியாக நடித்துக் கொண்டிருப்பது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

Also Read:சைக்கோவிடம் டீல் பேசும் குணசேகரன்.. புரியாத புதிராக இருக்கும் ஜீவானந்தம்

இப்போது விஜய் டிவி இந்த சீரியலுக்கு எதிராக கிழக்கு வாசல் என்னும் சீரியலை களம் இறக்க இருக்கிறது. இதில் தளபதி விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் அவர்களை முக்கியமான கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறார்கள். இவர் நடித்தால் சீரியல் கண்டிப்பாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்பது விஜய் டிவியின் திட்டம். ஆனால் சீரியலுக்கான ரீச் இனிவரும் நாட்களில் தான் தெரியும்.

கிழக்கு வாசல் சீரியலை தொடங்கியதில் இருந்தே எதிர்நீச்சலுக்கு போட்டியாக இது இருக்க வேண்டும் என பல திட்டங்களை போட்டு இருக்கிறது விஜய் டிவி. அந்த சீரியலின் முக்கியமான கேரக்டர்களை அவர்களுடைய சேனலுக்கு இழுத்து விட வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய பிளான். இது ஒரு முறை நடிகர் மாரிமுத்து கொடுத்த பேட்டியின் போதே தெரிந்தது.

Also Read:மீனாட்சி கிட்டயே டக்கால்டி வேலையை காட்டுற குணசேகரன்.. ஜீவானந்தத்தின் கேரக்டரை சொதப்பிய எதிர்நீச்சல்

கிழக்கு வாசல் சீரியலில் எஸ்ஏசி கேரக்டரில் முதலில் நடிப்பதற்கு எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ஆக நடித்துக் கொண்டிருக்கும் மாரிமுத்துவை தான் முதலில் அணுகியிருக்கிறார்கள். அவருடைய கால்ஷீட் ஒத்து வராததால் அவரால் அந்த நாடகத்தில் நடிக்க முடியவில்லை. அதோடு நிறுத்திக் கொள்ளாத விஜய் டிவி அந்த சீரியலின் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்திற்கு தூண்டில் போட்டு இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியலின் வில்லி கேரக்டர் என்றாலும் மக்களிடையே கொண்டாடப்படுபவர் தான் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடிக்கும் காயத்ரி கிருஷ்ணன். இவரை கிழக்கு வாசல் தொடரில் நடிக்க வைப்பதற்கு விஜய் டிவி முயற்சி செய்திருக்கிறது. காயத்ரியும் முதலில் ஒப்பந்தமாகி பின்னர் கால்ஷீட் பிரச்சனையால் விலகி விட்டாராம். ஒட்டுமொத்தமாக எதிர்நீச்சல் சீரியலை காலி பண்ணியே ஆக வேண்டும் என களத்தில் குதித்திருக்கிறது விஜய் டிவி.

Also Read:இனிமே ஒத்த கை குணசேகரன் தான் கூப்பிடுவாங்க.. எதிர்பாராத திருப்பங்களுடன் எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News