பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்களுக்கு நடு ரோட்டில் கிடைத்த டோஸ்.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கோமதி

Pandian Stores 2 serial: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் விவரம் தெரியாமல் ராஜி- கதிர் திருமணத்தை அவசர அவசரமாக கோமதி செய்து வைத்துவிட்டார். ஆனால் அதன் விளைவுகளை இப்போது கதிர் தான் அனுபவிக்கிறார். தன்னுடைய தங்கையின் மனதை கலைத்து காதலிப்பது போல் ஏமாற்றி, குடும்பத்தை பழிவாங்கி விட்டதாக ராஜியின் அண்ணன் குமரவேல் கதிரை பற்றி தவறாக புரிந்து கொண்டார்.

இதனால் கொலை வெறியிலிருந்த அவர் கதிரை அடியாட்களுடன் சேர்ந்து பொளந்து கட்டிவிட்டார். மகனை அடித்ததை பார்த்து தாங்க முடியாத கோமதி, தன்னுடைய அண்ணன்களிடம் சண்டைக்கு எகிறுகிறார். ‘இதேபோன்று இன்னொரு தடவை மட்டும் நடந்தால், அவ்வளவுதான், தொலைச்சிடுவேன்!’ என்றும் குமரவேல் மற்றும் அவருடைய அண்ணன்களை மிரட்டுகிறார்.

நடுரோட்டில் கோமதி கத்துவதை பார்த்ததும் பாண்டியனும் திட்ட தான் போகிறார் என எல்லோரும் நினைத்தனர். ஆனால் கதிர் அடி வாங்கினதை பற்றி கொஞ்சம் கூட பாண்டியன் கவலைப்படல. இது கதிருக்கு மட்டுமல்ல கோமதிக்கும் ரொம்பவே வலிச்சது. பாண்டியன் இந்த அளவிற்கு கதிரை வெறுப்பார் என்று நினைக்கவில்லை என்று அழுகிறார்.

Also Read: முத்து மீது ரோகினிக்கு ஏற்பட்ட சந்தேகம்.. உண்மையை கண்டுபிடிக்க போகும் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மருமகளுக்கு இந்த நிலைமையா!.

உடனே கதிர் ‘குமரவேல் என்னை அடிச்சது, அப்பா கண்டுக்காம போறது எல்லாம் நடக்கும் என்று தெரிந்தது தானே ராஜியை எனக்கு கல்யாணம் செய்து வைத்தாய்! அப்படி இருக்கும் போது உன்னுடைய அழுகைக்கு மட்டும் அர்த்தம் தெரிய மாட்டேங்குது ’ என்று கோமதி இடம் கேட்கிறார்.

கதிர் சொன்னதை கேட்டதும் கோமதி மனம் ரொம்பவே புண்படுகிறது. மறுபுறம் ராஜியையும் குமரவேல் வழி மறித்து முறைத்து விட்டு போகிறார். ‘அண்ணன் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே!’ என்று ராஜி அழுக மீனா அவரை சமாதானப்படுத்துகிறார். அந்த சமயத்தில் மீனாவின் அம்மாவும் எதிரே வருகிறார்.

அவரைப் பார்த்ததும் மீனா ஆசையாக சென்று பேசுகிறார். ஆனா அவருடைய அம்மாவோ, ‘நீ என்னோட பிள்ளையே இல்லை! என் முகத்தில் முழிக்காதே!’ என்று திட்டுகிறார். இப்படி ஓடிப்போய் ரெண்டு பேரும் திருமணம் செய்து கொண்டதால் நடுரோட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்களுக்கு அடுத்தடுத்து செம டோஸ் கிடைக்கிறது. உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தானே ஆகணும்! எல்லோருடைய சம்மதத்துடன் கல்யாணம் செஞ்சிருந்தா ராஜி மற்றும் மீனா இருவருக்கும் நடு ரோட்டில் இப்படி ஒரு சங்கடம் ஏற்பட்டிருக்காது.

Also Read: பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கோமதி.! கொலகாண்டில் இருக்கும் பாண்டியன் குடும்பம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்