முத்து மீது ரோகினிக்கு ஏற்பட்ட சந்தேகம்.. உண்மையை கண்டுபிடிக்க போகும் மீனா

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவை தேடி போய் மீனாவின் தம்பி திருடிய பணத்தை கொடுத்து நக்கலாக பேசி அவமானப்படுத்தி விட்டார். இவனை எப்படி திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை. இவனை நம்பி தான் மொத்த குடும்பமும் முன்னுக்கு வருவோம் என்று நம்பி இருக்கிறார்கள். ஆனால் இவன் இப்படி தறுதலையாக ஊர் சுற்றுகிறானே என்று முத்து ரொம்பவே பீல் பண்ணி நண்பனிடம் சொல்லுகிறார்.

இதனை அடுத்து முத்துவின் தம்பி கொடுத்த பணத்தை எடுத்துட்டு வந்து அப்பாவிடம் கொடுக்கிறார். அத்துடன் அம்மாவிடமிருந்து திருடிய பணம் போலீஸ் மூலம் நமக்கு திரும்ப வந்துவிட்டது என்று சொல்கிறார். உடனே ரோகிணி அது எப்படி இது சாத்தியமே ஆகாதே. திருடிய பணம் போலீஸ் மூலமா கிடைக்கிறது இதுவரை அப்படி நடந்ததே இல்லையே என்று சந்தேகத்துடனே கேட்கிறார்.

அதற்கு முத்து உனக்கு இந்த மாதிரி எல்லா விஷயமும் தெரிஞ்ச மாதிரி பேசுகிற உனக்கு இதில் ஏதாவது அனுபவம் இருக்கிறதா என்று கேட்கிறார். அத்துடன் கஷ்டப்பட்டு உழைத்த காசு எப்போதுமே வீணாகாது, என்று பணத்தை அண்ணாமலை வாங்கிக் கொள்கிறார். அப்பொழுது விஜயா யார் இந்த பணத்தை திருடினார்கள் என்று சொல்லு அவர்களை நான் அடித்து உதைக்க வேண்டும் என்று சொல்கிறார்.

Also read: ஒத்தையா ரெட்டையா போட்டு சீரியலை விட்டு விலகப் போகும் சிறகடிக்கும் ஆசை நாயகி.. சன் டிவிக்கு சொன்ன குட்பாய்

அதற்கு முத்து நீங்க அப்போ ஜெயிலுக்கு தான் போகணும் என்று சொல்கிறார். ஏனென்றால் திருடியவன் ஜெயில்ல தான் இருக்கிறான் என்று சொல்லி சமாளித்து விடுகிறார். பிறகு ரோகிணிக்கு முத்துவின் மீது சந்தேகம் வந்துவிட்டது. அதனால் தனியாக மனோஜிடம் இந்த பணத்தை முத்து திருடி இருக்கணும். இல்லையென்றால் திருடியவருடன் முத்துவுக்கு ஒரு சம்பந்தம் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

உடனே மனோஜ் அவன் குதிர்க்கமாக பேசுவானே தவிர இந்த மாதிரி வேலை எல்லாம் பார்க்க மாட்டான் என்று தம்பிக்கு சப்போர்ட்டாக பேசுகிறார். ஆனால் இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது மீனா வெளியில் இருந்து அனைத்தையும் கேட்கிறார். அதன்பின் இதில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது. அதனால் தான் தன்னுடைய கணவர் நடவடிக்கையும் மாறி இருக்கிறது என்று மீனா உணர்ந்து கொள்கிறார்.

இதனை அடுத்து இதற்கு பின்னாடியில் இருக்கும் ரகசியத்தை மீனா அறிந்து கொள்ள முயற்சி எடுக்கப் போகிறார். எது எப்படியோ மீனாவுக்கும் முத்துவுக்கும் இப்பொழுது இருக்கிற பிரச்சனை முடிந்து விட்டு சுமூகமாக ஆன இந்த நாடகம் பழைய மாதிரி விறுவிறுப்பாக மாறும். அத்துடன் கூடிய விரைவில் ரோகினியும் கையும் களவுமாக விஜயாவிடம் சிக்க வேண்டும்.

Also read: 300 எபிசோடை வெற்றிகரமாக கடந்த சிறகடிக்கும் ஆசை சீரியலின் ஆட்டநாயகன்.. முத்துவிற்கு அடித்த ஜாக்பாட்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்