இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் பெண்.. பிக் பாஸ் போட்டியாளராக லாக் செய்த விஜய் டிவி

வரும் ஆகஸ்ட் மாதம் பிக் பாஸ் சீசன் 7 துவங்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதன் தொடர்ச்சியாக மற்ற எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசன் தாறுமாறாக இருக்க வேண்டும் என போட்டியாளர்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகின்றனர். அதிலும் சீசன் 6ல் முதல் முதலாக மக்கள் சார்பில் இருந்து தனலட்சுமி கலந்து கொண்டு நிகழ்ச்சியை காரசாரமாக்கினார்.

அதே போல இந்த முறையும் மக்கள் சார்பில் இருந்து ஒன்றல்ல இரண்டு போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என விஜய் டிவி முடிவெடுத்து இருக்கிறது.  அதன் முதல் கட்டமாக தற்போது சோசியல் மீடியாவில் செம டிரெண்டாகிக் கொண்டிருக்கும் கோவை மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுநராக கலக்கிக் கொண்டிருக்கும் ஷர்மிளாவை பிக் பாஸ் சீசன் 7ன் போட்டியாளராக விஜய் டிவி தேர்வு செய்திருக்கிறது

Also Read: பிக் பாஸ் சீசன் 7 எப்போது தெரியுமா.? 50 கோடி சம்பளத்தை உயர்த்திய விஜய் டிவி

அதிலும் ஷர்மிளா கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவை பரபரப்பாக்கி கொண்டிருக்கிறார். மினி சைஸ்ல இருக்கும் ஷர்மிளா ஒரு தனியார் பேருந்தை ஓட்டுவது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இவரைப் பாராட்டும் விதமாக எம்பி கனிமொழி அவருடைய பேருந்தில் ஏறி சென்று இருக்கிறார்.

அவரிடம் டிக்கெட் கேட்ட கண்டக்டரை ஷர்மிளா தடுத்ததால், அது பெரிய பிரச்சனையானது. இதைப் பற்றி ஷர்மிளாவின் தந்தை பஸ் ஓனரிடம் பேசியபோது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றி தரக்குறைவாக பேசிக்கொண்டனர். அதனால் ஷர்மிளா வேலையை விட்டு நின்றார்.

Also Read: எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய பிரபலம்.. குடும்ப பஞ்சாயத்தை சந்தி சிரிக்க வைத்த ரட்சிதா

இவருக்கு பல கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் அரசு வேலை போட்டு தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இது கமலின் காதுக்கு எட்டியதும் அவர் ஒரு கார் வாங்கி ஷர்மிளாவிற்கு இன்று வழங்கியுள்ளார். ஷர்மிளா மற்றும் கமல் இருவரும் கலந்துரையாடிய புகைப்படமும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இதைப் பார்த்த பிறகு தான் ஏன் ஷர்மிளாவை பிக் பாஸ் போட்டியாளராக தேர்வு செய்யக்கூடாது? என விஜய் டிவிக்கு யோசனை வந்து, அவரை முதல் போட்டியாளராக லாக் செய்து இருக்கிறது.போன சீசன்னில் தனலட்சுமி போல இந்த சீசனில் ஷர்மிளா பொளந்து கட்ட போகிறார்.

Also Read: மீண்டும் வெடிக்கும் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் பிரச்சனை.. விஜய்க்கு போட்டியாக கமலை இழந்து விடும் திரையுலகம்

Next Story

- Advertisement -