படுக்கையறை காட்சிகளை வைத்து டிஆர்பியை ஏற்றும் விஜய் டிவி.. அக்கப்போரை கூட்டும் மட்டமான சீரியல்

என்னதான் பொழுது போக்குவதற்கு பல விஷயங்கள் இருந்தாலும் டிவியில் சீரியல்களை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் இல்லத்தரசிகளின் பெரும்பாலான நேரம் இந்த சீரியல்களோடு தான் முடியும். அதனாலேயே பல சேனல்களும் போட்டி போட்டு புதுப்புது நாடகங்களை களம் இறக்கி வருகின்றன.

அந்த வகையில் டிஆர்பி-யில் சாதனை படைக்க வேண்டும் என்று விஜய் டிவி பல தந்திரமான வேலைகளை பார்த்து வருகிறது. அது மட்டுமின்றி புதுமையான சீரியல்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு ரசிகர்கள் தரப்பிலிருந்து வரவேற்பு கிடைத்தாலும் சமீப காலமாக விஜய் டிவியின் போக்கு பலரையும் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது.

Also read: டிஆர்பி-யில் தெறிக்கவிடும் முதல் 5 சீரியல்கள்.. சன் டிவியை தூக்கிவிடும் குணசேகரன்

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அளவுக்கு அதிகமாக ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெறுகிறது. அதிலும் படுக்கையறை காட்சிகளை அவர்கள் தாராளமாகவே ஒளிபரப்புகின்றனர். அந்த வகையில் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் சமீப காலமாக முதலிரவு காட்சிகள் தான் அதிகமாக காட்டப்பட்டு வருகிறது.

முதலில் பார்த்திபன், காவ்யா ஜோடியின் முதலிரவு காட்சிகள் படு நெருக்கமாக காட்டப்பட்டது. அதை தொடர்ந்து ஜீவா கனவு காண்பது போல் ஒரு முதலிரவு காட்சி அட்டகாசமான பாடலோடு ஒளிபரப்பப்பட்டது. இதைப் பார்த்து நொந்து போன ரசிகர்கள் அதையும் ப்ரோமோவாக திரும்பத் திரும்ப சேனல் ஒளிபரப்பும் போது இன்னும் அதிக கடுப்பானார்கள்.

Also read: குணசேகரனை ஏமாற்றும் ஜனனியின் புதிய திட்டம்.. கதிரின் அடாவடித்தனத்துக்கு சரியான பதிலடி

சரி தொலையுது என்று பார்த்தால் சில தினங்களுக்கு முன்பு ஜிகே, ரம்யாவின் திடீர் திருமணம், அதை தொடர்ந்து முதலிரவு காட்சிகள் என்று சீரியலில் ரொமான்ஸ் பொங்கி வழிந்தது. இதுதான் தற்போது பலரின் விமர்சனத்திற்கும் ஆளாகி வருகிறது. இதற்கு முன்பே தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் இப்படி தான் அதிக ரொமான்ஸ் காட்சிகளை காட்டி இருந்தார்கள்.

அதுவே விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஈரமான ரோஜாவே 2 சீரியல் கொஞ்சம் ஓவராக போகிறது என நெட்டிசன்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். இப்படி படுக்கையறை காட்சிகளை வைத்து டிஆர்பிஐ ஏற்றும் அளவுக்கு விஜய் டிவி கேவலமாக இறங்கி விட்டதா எனவும் குடும்பத்தோடு பார்க்க முடியாதபடி அக்கப்போரை கூட்டும் சீரியல்கள் பற்றியும் பல புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இனிமேலாவது விஜய் டிவி இது போன்ற காட்சிகளை குறைத்துக் கொண்டால் நல்லது.

Also read: குணசேகரனுக்கு எதிரான சூழ்ச்சியில் ஒட்டுமொத்த குடும்பம்.. அல்லக்கை கதிருக்கு சரியான ஆப்பு வைக்கும் ஜனனி