ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பிரதீப்பிடம் மண்டியிட்ட விஜய் டிவி.. டிஆர்பியை தூக்கி நிறுத்த கதறும் பிக் பாஸ்

Biggboss 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தாறுமாறாக சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாகவே கன்டென்ட் பற்றாக்குறையால் டிஆர்பி சரியும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதிலும் நேற்றைய எபிசோடு சூர மொக்கையாக இருந்தது.

இருப்பினும் இன்று ஆண்டவரின் வருகை அதையெல்லாம் சரி கட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அது மட்டுமல்லாமல் இந்த வாரம் பிராவோ மற்றும் அக்ஷயா இருவரும் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். அதைத்தொடர்ந்து ஏற்கனவே வெளியில் சென்ற இரண்டு பேர் உள்ளே வர இருக்கின்றனர்.

அதில் விஜய் வர்மா வருவது உறுதியாக இருக்கிறது. இந்நிலையில் விஜய் டிவி பிரதீப்பிடமும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அவருக்கு சேனல் தரப்பு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது. ஆனால் அதுவே சொந்த செலவில் சூனியம் வைத்த கதையாக மாறியது.

Also read: மந்திரவாதி தந்திரவாதி யாருடைய பாட்ஷா பலிக்கும்.? முதுகில் குத்தி டைரக்ட் நாமினேஷனுக்கு வந்த கேப்டன்

இதனால் கமலும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தார். மேலும் பிரதீப் மேல் எந்த தவறும் இல்லை என பல வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இதனாலேயே அவருடைய ரீ என்ட்ரி மீண்டும் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

ஆனால் பிரதீப் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு கோவாவுக்கு சென்று விட்டார். ஆனாலும் விஜய் டிவி அவரை வரச் சொல்லி பேசி வருகிறார்களாம். அந்த ஆஃபரை தற்போது மறுத்து வரும் பிரதீப் ஒருவேளை வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

அப்படி மட்டும் நடந்து விட்டால் மாயா அண்ட் கோ நிலைமை அவ்வளவுதான். இதை பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். ஆக மொத்தம் டிஆர்பியை தூக்கி நிறுத்த பிரதீப்பிடம் மண்டியிட்டு இருக்கும் விஜய் டிவி அவரை நிகழ்ச்சிக்குள் கொண்டு வருமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: இந்த மூணு விஷயத்தில் கமல் வாய திறக்கலைன்னா.. பிக் பாஸ்ஸின் மொத்த டிஆர்பியும் போச்சு

- Advertisement -

Trending News