ஒரே கதையை வைத்து 2 சீரியல்களை உருட்டும் விஜய் டிவி.. இதுக்கெல்லாம் டிஆர்பி ரேட்டிங் ஒரு கேடு

ஒவ்வொரு வாரமும் சன் டிவி மற்றும் விஜய் டிவி போன்ற இரண்டு சேனல்களுக்கும் இடையே தான் டிஆர்பி-யில் கடும் போட்டி நிலவு வரும். ஆனால் கடந்த சில வாரங்களாகவே டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் விஜய் டிவி டாப் 6 இடங்களில் இருந்து தூக்கி வீசப்பட்டிருக்கிறது.

இதற்கு காரணம் என்னவென்றால் கதையே இல்லாமல் 2 சீரியல்களில் ஒரே கதையை வைத்து உருட்டிக் கொண்டிருக்கும் விஜய் டிவி சீரியல் இயக்குனர்களின் மட்டமான யோசனை தான். அதிலும் பாரதிகண்ணம்மா மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் ஒரே மாதிரியான கதைகளத்தை ஒளிபரப்புகிறது.

Also Read: பேய் படத்தில் நடிக்க போகும் ராஜா ராணி 2 வில்லி.. முதல் படத்திலேயே அரசியல் வாரிசுடன் இணையும் அதிர்ஷ்டம்

இதனால் சலிப்படைத்த ரசிகர்களும் பாரதிகண்ணம்மா மற்றும் பாக்கியலட்சுமி சீரியலை பார்ப்பதையே நிறுத்தி உள்ளனர். இப்படி இருக்கும் சூழலில் ‘இந்த சீரியல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் ஒரு கேடு’ என்று ஒவ்வொரு வாரமும் இணையத்தில் வெளியாகும் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் வைத்து நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

ஏனென்றால் முன்பு டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் டாப் லிஸ்டில் இருந்த பாக்கியலட்சுமி சீரியலில், தற்போது கதாநாயகி பாக்கியலட்சுமி கணவரை விட்டு பிரிந்து கேட்டரிங் செய்வது மட்டும் இல்லாமல் குழம்பு பொடி, மிளகாய்ப் பொடி என அனைத்தும் செய்து கொடுக்கிறார்.

Also Read: 4 வயது மூத்த நடிகையை திருமணம் செய்யும் பசங்க பட சின்ன பையன்.. ட்ரெண்டாகும் புகைப்படம்

அதேபோல் தான் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா-வும் கணவரை விட்டு பிரிந்து மாவு அரைத்து விற்பது, குழம்பு பொடி, மிளகாய் பொடி செய்து கொடுத்து பெரிய பிஸினஸ் உமன் போல் சுற்றி வருகிறார். இப்படி மட்டமான கதையை வைத்து இயக்குனர் உருட்டி வருவதாக சமூக வலைத்தளங்களில் கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.

இப்படி விஜய் டிவி சீரியல்களுக்கு சோசியல் மீடியாவில் எதிர்மறையான கருத்துக்கள் குவிவதால், டிஆர்பி-யிலும் பயங்கர அடி வாங்கிக் கொண்டிருக்கும் சீரியல்களின் கதைக்களத்தை மாற்றினால் விஜய் டிவிக்கு நல்லது. இல்லையென்றால் தொடர்ந்து சன் டிவி சீரியல்களால் பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய் டிவி, மூன்றாம் இடத்தில் இருக்கும் ஜீ தமிழ் சீரியலாலும் பின்னுக்கு தள்ளப்படக்கூடிய நிலை வந்துவிடும்.

Also Read: டிஆர்பி-யில் டாப் 6 இடங்களை ஆக்கிரமித்த ஒரே சேனல்.. புத்தம் புது சீரியல்களால் பின்னுக்குத் தள்ளப்பட்ட பிரபல சீரியல்கள்