ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வரப்போகுது பிக்பாஸ் சீசன் 8.. சத்தம் இல்லாமல் நடக்கும் ஆடிஷன், யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா.?

Bigg boss 8: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் ஷோவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் இந்த ஷோ நடக்கும் மூன்று மாத காலமும் மத்த சேனல்களின் டிஆர்பி சுத்தமாக குறைந்து விடும்.

அதேபோல் சோசியல் மீடியாவும் அனல் பறக்கும். மேலும் ஆண்டவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களும் இருக்கின்றனர். ஆனால் கடந்த சீசன் தான் அப்படியே உல்டாவாக மாறியது.

ஏனென்றால் கமல் கடந்த சீசனில் பாராபட்சமாக நடந்து கொண்டது அவருக்கே பின்னடைவாக மாறியது. அதிலும் பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்டு விவகாரம் இப்போதும் கூட ஒரு சர்ச்சை தான்.

ஆனால் எப்படியோ கடந்த சீசன் முடிந்த நிலையில் இப்போது எட்டாவது சீசன் ஆரம்பிக்க இருக்கிறது. அதற்கான ஆடிஷன் வேலைகளை சேனல் தரப்பு சத்தம் இல்லாமல் செய்து வருகிறது.

வரபோகுது பிக் பாஸ் 8

இதில் இப்போது யார் சர்ச்சைக்குரிய பிரபலங்களாக இருக்கிறார்களோ அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் யார் யார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை காண்போம்.

எப்போதுமே விஜய் டிவியின் பிரபலங்கள் நிகழ்ச்சியில் இருப்பார்கள். அதன்படி இந்த முறை மாகாபா ஆனந்த் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

அடுத்ததாக சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருக்கும் டிடிஎஃப் வாசன், இர்ஃபான் ஆகியோரை நிகழ்ச்சியின் உள்ளே அழைத்து வர ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.

சர்ச்சை போட்டியாளர்கள்

அதேபோல் குக் வித் கோமாளியில் துருதுருவென இருக்கும் ஷாலின் ஜோயா இடம்பெறவும் வாய்ப்பு இருக்கிறது. கிட்டத்தட்ட ஓவியா போன்று இவருடைய பேச்சும் ரசிக்கப்பட்டு வருகிறது.

அதனாலயே சேனல் இவரை டிக் செய்யும் முடிவில் உள்ளனர். இவர் டிடிஎப் வாசனின் காதலி என்பதும் ஒரு காரணம். கடந்த சீசனில் மணி, ரவீனா போல் இந்த சீசனில் இவர்கள்.

மேலும் நடனத்தின் மூலம் பிரபலமானவர்களும் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இது தவிர ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

ஆனால் இது அதிகாரப்பூர்வமான செய்தி கிடையாது. இப்படி ஒரு பேச்சு வார்த்தை சேனல் தரப்பில் இருந்து நடந்து வருவதாக கூறுகின்றனர். விரைவில் இது குறித்த உறுதியான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீசனாவது நேர்மையா நடக்குமா ஆண்டவரே.?

- Advertisement -

Trending News