குடும்பம் சரி இல்லன்னு சொன்னா, அடுத்தவ புருஷனை வளச்சு போட்ருவீர்களா.. பாக்கியலட்சுமியின் இந்த வார ட்விஸ்ட்

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த திருப்பம் வரிசையாக அரங்கேறுகிறது. அதிலும் யாரும் கொஞ்சம் கூட யோசிக்காத அளவுக்கு பாக்யா நடந்துகொள்வது சீரியல் ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கிறது.

இந்த சீரியலில், தன்னுடைய கணவரை தான் ராதிகா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதை தெரிந்ததும் ஆத்திரத்தில் பாக்யா, ராதிகா வீட்டிற்கே சென்று அவரை நாக்க பிடுங்குவது போல் பேசுகிறார். அப்போது, கையெடுத்து கும்பிட்டு அழுது கெஞ்சும் ராதிகா, ‘கோபியின் மனைவி நீங்கள்தான் என்று எனக்கு தெரியாது.

தெரிந்ததும் அவரை விட்டு விலக முயற்சித்தேன்’ என்று தனது தரப்பு நியாயத்தை சொல்லுகிறார். இருப்பினும் அதை கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்காத பாக்யா, இந்த விஷயத்தில் ராதிகா-கோபி இருவரும் சேர்ந்து தன்னை முட்டாளாக்கியதை நினைத்து கொந்தளித்துப் பேசுகிறார். மேலும் ராதிகாவின் மீது கோபம் இருப்பதைவிட இவ்வளவு நாள் முட்டாளாக இருந்ததுதான் பாக்யாவிற்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்துகிறது.

ஒருகட்டத்தில் ராதிகா தன்னுடைய மகள் மீது தலையில் அடித்து சத்தியம் செய்து பாக்யாவிற்கு புரியவைக்க முயற்சிக்கிறார். அப்போது பாக்யாவின் வீட்டு வேலைக்காரி சாந்தி, ‘குடும்பம் சரி இல்லை என்று ஒரு ஆம்பள சொன்னால், அதை நம்பி அடுத்தவன் புருஷனை வளைத்து போட்டு விடுவீர்களா’ என்று ராதிகாவை அசிங்கப்படுத்துகிறார்.

அப்போது ராதிகா பதிலேதும் சொல்ல முடியாமல், தனக்கும் தனது மகளுக்கும் எந்த சாபமும் இடாதீர்கள் என பாக்யாவை கெஞ்சுகிறார். ராதிகாவின் மகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அப்போதுகூட பாக்யா, ராதிகாவின் மகளிடம் அன்பாகவும் கனிவாகவும் பேசுகிறார்.

‘நீ நன்றாக இருப்பாய்’ என பாக்யா, ராதிகாவின் மகளை வாயார வாழ்த்தி வீட்டை விட்டு கிளம்புகிறார். அந்த சமயம் ராதிகாவிற்கு பாக்யாவின் உயர்ந்த உள்ளம் தெரிகிறது. இதன்பிறகும் கோபி என்ன நாடகம் போட்டாலும் நிச்சயம் ராதிகா, பாக்யாவிற்கு எதிராக செயல்பட மாட்டார். கோபி விட்டு நிரந்தரமாக விலகி செல்ல நினைப்பார். இப்படி அதிரடி திருப்பங்கள் பாக்கியலட்சுமி சீரியலில் ஏற்பட்டுள்ளது.

Next Story

- Advertisement -