அப்பா சொன்ன மாதிரி சஞ்சய் படத்தின் ஹீரோ இவர்தான்.. எல்லாம் புது பொண்டாட்டி வந்த அதிர்ஷ்டம்

Jason Sanjay – Thalapathy Vijay: இளங்கன்று பயமறியாது என்று சொல்வது போல் தற்போது ஜேசன் சஞ்சய் தன்னுடைய பட வேலைகளுக்காக படு சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார். இவர் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார் என்று வந்த அப்டேட் இருக்கு பயங்கர வரவேற்பு வந்த நிலையில் இப்போது படத்தில் யார் யார் நடிப்பார்கள் என்ற கேள்வியும் அதிகமாகி விட்டது.

ஆரம்பத்தில் இவர் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்ற வதந்தி வெளியானது. அதன் பின்னர் நடிகர்கள் துருவ் விக்ரம் அல்லது அதர்வா முரளியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டில் ஒருவரை ஹீரோவாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது ஆனால் இவர்கள் இரண்டு பேருமே இப்போது சாய்சில் இல்லை. அதற்கு முக்கிய காரணமே தளபதி விஜய் தானாம்.

Also Read:விஜய்க்கு பாய் சொல்லிட்டு திருமணத்திற்கு ஓகே சொன்ன திரிஷா.. அக்கட தேசத்தில் இருந்து வரும் புது மாப்பிள்ளை

ஜேசன் சஞ்சய்க்கு ஆரம்பத்திலிருந்து சினிமாவில் வரவேண்டும் என்பதுதான் ஆசை. அதற்காகத்தான் வெளிநாடு சென்று விசுவல் கம்யூனிகேஷன் படிப்பை கூட படித்து முடித்திருக்கிறார். அப்படி இருந்தும் இவர் இயக்குனராக அறிமுகமாகிறார் என்ற செய்தி வெளியானதும் வாரிசு என்பதால் ஈசியாக வாய்ப்பு கிடைத்து விட்டது என்று பரவலாக பேசப்பட்டது.

இப்படி இருக்கும் பட்சத்தில் வாரிசு நடிகர்களான துருவ் விக்ரம் அல்லது அதர்வா முரளியை இவர் தன்னுடைய படத்தில் நடிக்க வைத்தால் அது கண்டிப்பாக நெப்போடிசம் என்றுதான் பேசப்படும். இதனால் தான் ஏ ஆர் ரகுமான் மகனை தன்னுடைய படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்த சஞ்சய்க்கு மருப்பு தெரிவிக்கப்பட்டது.

Also Read:லோகேஷ், லியோவுக்கே கண்டிஷன் போடும் அனிருத்.. பேராசையால் ஆடும் ஆட்டம்

மகனால் தன்னுடைய பெயர் எந்த விதத்திலும் டேமேஜ் ஆகி விடக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். அதனால் தான் வேறு ஒரு நடிகரை பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டாராம். இந்த முடிவு இப்போது அதிர்ஷ்டமாக அமைந்திருப்பது நடிகர் கவினுக்குத்தான். அவரைத்தான் ஜேசன் சஞ்சய் தற்போது தன்னுடைய படத்திற்கு ஹீரோவாக தேர்ந்தெடுத்து இருக்கிறாராம்.

கவினுக்கு டாடா படம் ஒரு பெரிய ஜாக்பாட் ஆக அமைந்துவிட்டது. அதன் பின்னர் தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோவாக மாறி இருக்கும் இவருக்கு புது பொண்டாட்டி வந்த நேரம் தளபதி விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு கண்டிப்பாக கவினின் சினிமா வாழ்க்கை மிகப்பெரிய திருப்பு முனையை சந்திக்கும்.

Also Read:மாஸ் காம்போவில் உருவாகும் அட்லீயின் படம்.. தலையசைத்த 2 ஜாம்பவான்கள்