விஜய் சேதுபதி இப்படி செய்வாருன்னு நினைக்கவே இல்ல.. மகாராஜா சிங்கம்புலி சொன்ன ரகசியம்

Vijay Sethupathi: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் மகாராஜா வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் மூன்று நாளில் 33 கோடி வரை வசூலித்துள்ளது.

நட்டி நடராஜ், அபிராமி, அனுராக் காஷ்யப், சிங்கம் புலி என ஏகப்பட்ட பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி விஜய் சேதுபதிக்கு இது 50வது படம் என்பதும் கூடுதல் சிறப்பு.

அதை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் சிங்கம் புலி பகிர்ந்துள்ள ஒரு விஷயம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதாவது மகாராஜா பட சூட்டிங்கின் போது அவருக்கு வேறு ஒரு படப்பிடிப்பு காலை 11 மணிக்கு கும்பகோணத்தில் இருந்திருக்கிறது.

சிங்கம்புலி சொன்ன சீக்ரெட்

ஆனால் இரவு முழுவதும் மகாராஜா படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இதனால் அவர் கொஞ்சம் டென்ஷனாக இருந்தாராம். சரியாக விடிய காலையில் விஜய் சேதுபதி அவரை ஒரு டிரைவரோடு அனுப்பி வைத்திருக்கிறார்.

எப்படி என்றால் இரவு சீக்கிரமாகவே டிரைவரை சாப்பிட்டு விட்டு தன் கேரவனில் அவர் தூங்க சொன்னாராம். அப்போது தான் வண்டி ஓட்டும் போது தூக்கம் வராது என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் 2 நாட்கள் சிங்கம் புலி கும்பகோணத்தில் ஷூட்டிங் முடித்து வீடு திரும்பும் வரை அனைத்து செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என டிரைவரிடம் 40,000 பணத்தையும் கொடுத்திருக்கிறார்.

எந்த ஹீரோ இப்படி எல்லாம் செய்வார். இதை தற்போது பகிர்ந்துள்ள சிங்கம் புலி இப்படிப்பட்ட மனசு இருக்கிறதால தான் அவர் இந்த உயரத்தில் இருக்கிறார். விஜய் சேதுபதி மாதிரி வேறு யாரும் இருக்க முடியாது.

எல்லாருக்கும் 50வது படம் வெற்றி அடைந்து விடாது. ஆனால் மகாராஜா மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது என நெகிழ்ந்து போய் பேசியுள்ளார்.

வெற்றிவாகை சூடிய மகாராஜா

Next Story

- Advertisement -