புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

365 நாள் ஓடிய தளபதியின் ஹிட் படம்.. முதல் முறையாக விஜய்க்காக குவிந்த ஃபேமிலி ஆடியன்ஸ்

தற்போதைய தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் குழந்தைகள், ஃபேமிலி ஆடியன்ஸ் என இவர் திரைப்படத்தை பார்க்க தியேட்டர்களில் கூட்டம் குவியும். அந்த அளவுக்கு அவர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் விஜய் படங்களை பார்க்க இளைஞர்கள் கூட்டம் தான் அதிக அளவில் வருவார்கள். ஃபேமிலி ஆடியன்ஸ் அவ்வளவாக அவர் திரைப்படத்தை பார்ப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஏனென்றால் அப்போது அவருடைய படங்களில் அதிக ரொமான்ஸ் காட்சிகள் இருக்கும்.

இதனாலேயே குழந்தைகள், பெண்கள் யாரும் அவருடைய திரைப்படத்தை பார்ப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அப்படி இருந்த மக்கள் விஜய்யின் ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு கூட்டம் கூட்டமாக தியேட்டரில் குவிந்தார்கள். அதுவரை மிகக் குறைவான ரசிகர்களை பெற்றிருந்த விஜய்க்கு பூவே உனக்காக திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியது.

விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படம் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தியேட்டரில் கிட்டத்தட்ட 365 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்த படம் வெளிவந்த முதல் நான்கு வாரத்திற்கு பெரிய அளவில் கூட்டம் எதுவும் இல்லாமல் இருந்திருக்கிறது.

விஜய் படம் இப்படித்தான் இருக்கும் என்ற கணிப்பில் ஃபேமிலி ஆடியன்ஸ் அந்த படத்தை பார்ப்பதை தவிர்த்தனர். ஆனால் போகப் போக படத்திற்கு கிடைத்த நல்ல விமர்சனங்கள் அவர்களை தியேட்டரை நோக்கி வர செய்தது. படம் வெளியாகி கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் கடந்த நிலையில் அந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓட ஆரம்பித்தது.

அந்த படத்தின் மூலம் விஜய்க்கு ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண் ரசிகைகள் கிடைத்தனர். மேலும் இந்த ஒரு படம் அவருடைய வாழ்வையே மாற்றி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவருடைய அடுத்தடுத்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக அவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. பூவே உனக்காக திரைப்படம் இப்படி ஒரு சாதனை படைத்த விஷயத்தை அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்த ராஜகுமாரன் தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Trending News