வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

தனுஷ் வரிசையில் இணைய போகும் தளபதி விஜய்.. பரபரப்பாக வெளியான தளபதி 68 அப்டேட்

நடிகர் விஜய் தற்பொழுது லியோ திரைப்பட படப்பிடிப்பில் படு பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பானது சென்னையில் நடைபெற்றது. அதன் பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீருக்கு சென்றது. கடும் குளிரிலும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் மேக்கிங் வீடியோ கூட சமீபத்தில் வெளியானது.

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இருக்கிறார். விஜய்யின் பொங்கல் ரிலீஸ் ஆன வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுதே லியோ படத்திற்கான அப்டேட் வெளியானது. அதேபோன்று தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகியிருக்கிறது.

Also Read:கவுண்டமணியின் டைமிங்கை கச்சிதமாய் பிடிக்கும் 5 நடிகர்கள்.. கெமிஸ்ட்ரியில் பின்னி பெடலெடுத்த விஜய்

விஜய் கடந்த சில வருடங்களாகவே இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து வருகிறார். அட்லி, நெல்சன், லோகேஷ் கனகராஜ் எல்லாம் அந்த வரிசையில் வந்தவர்கள் தான். தற்போது அதிலிருந்து கொஞ்சம் மாறி ஒரு வெற்றி பட இயக்குனரின் கதைக்கு ஓகே சொல்லி இருக்கிறார். இந்த தகவலை டாணாக்காரன் திரைப்படத்தின் இயக்குனர் தமிழ் உறுதி செய்து இருக்கிறார்.

தமிழில் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் வெற்றிமாறன். ஆடுகளம், விசாரணை, அசுரன், வடசென்னை போன்ற வித்தியாசமான கதைக்களத்தினை கொண்டு வெற்றி கண்டவர். தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இவர் இயக்கிய விடுதலை திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது . அடுத்து இவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்னும் திரைப்படத்தையும் தயார் செய்து கொண்டிருக்கிறார்.

Also Read:தனுஷ் கொடுக்க போகும் இன்ப அதிர்ச்சி.. பல கலவரங்களுக்கு பிறகு வந்த குட் நியூஸ்

இதற்கிடையில் தான் இயக்குனர் வெற்றிமாறன் தளபதி விஜய்க்கு கதை சொல்லி அவர் ஓகே சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த கூட்டணி உறுதியானால் விஜய்யின் சமீபத்திய படங்களில் இருந்து சற்று வித்தியாசமான ஒரு படத்தை எதிர்பார்க்கலாம். மேலும் இந்த கூட்டணி ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பையும் பெறும்.

நடிகர் தனுஷின் ஆஸ்தான இயக்குனரான வெற்றிமாறனுடன் தளபதி விஜய் இணைய இருக்கிறார். லியோ படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுதே இந்த படத்திற்கான அப்டேட் வெளிவர அதிக வாய்ப்பு இருக்கிறது. தளபதி 68 என்பது விஜய் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி தான் என்பது ஓரளவுக்கு உறுதியாகி விட்டது.

Also Read:விசாரணையை ஐஸ்வர்யா பக்கம் திருப்பிய போலீஸ்.. தனுஷ், ரஜினி வீட்டிலும் கைவரிசை?.

- Advertisement -

Trending News