Connect with us
Cinemapettai

Cinemapettai

dhanush-rajini-ishwariya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விசாரணையை ஐஸ்வர்யா பக்கம் திருப்பிய போலீஸ்.. தனுஷ், ரஜினி வீட்டிலும் கைவரிசை?.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தால், மேலும் விசாரணையை போலீசார் தீவிர்ப்படுத்தி உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டில் 60 சவரன் நகை திருடு போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறை 60 சவரனுக்கு பதில் 100 சவரனை மீட்டுள்ளனர்.

இதனால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மீது போலீஸ் விசாரணையை திருப்பி உள்ளது. கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லாக்கரை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த நகை இல்லாதது தெரிந்ததும் போலீசில் புகார் அளித்தார். ஆனால் லாக்கர் உடைக்கப்படவில்லை.

Also Read: ஐஸ்வர்யாவின் நகைகளை மீட்ட போலீஸ்.. 4 ஆண்டுகளாக கூடவே இருந்து குழி பறித்த நபர்

மூடி வைத்தது அப்படியே இருந்ததால், லாக்கரில் நகை இருப்பது தெரிந்த நபர்கள் தான் திருடி இருக்க வேண்டும். ஆகையால் இது பற்றி தெரிந்த வீட்டுப் பணியாளர்கள் மூன்று பேரை புகாரில் குறிப்பிட்டிருந்தார். அவர் சந்தேகப்பட்டது போல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 4 வருடங்களாக வேலை செய்த ஈஸ்வரி என்பவர் தான் நகைகளை திருடி இருக்கிறார்.

இவருடைய வங்கி கணக்குகளை ஆராய்ந்த போலீஸ், லட்சக்கணக்கில் பணம்பரிமாற்றம் நடந்தது தெரியவந்துள்ளது. அவரை விசாரித்த போது திருடிய நகைகளை விற்று ஒரு கோடிக்கு சோழிங்கநல்லூரில் வீடு வாங்கியது தெரிய வந்தது. இதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்த டிரைவரின் உதவியுடன் செய்திருக்கிறார்.

Also Read: சோதனைக்கு மேல் சோதனையை சந்திக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. கூட இருந்தவங்களே குழி பறிச்சா எப்படி?

மேலும் 60 பவுன் திருடியதாக புகார் அளித்த நிலையில் 100 பவுன் கிடைத்ததால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் மட்டுமல்ல ரஜினிகாந்த், தனுஷ் வீட்டிலும் ஈஸ்வரி தன்னுடைய கைவரிசையை காட்டி இருப்பார் என சந்தேகிக்கப்படுகிறது.

ஏனென்றால் அவர்களது வீட்டிற்கும் வேலை செய்வதற்காக அடிக்கடி சென்று வருவாராம். ஆகையால் அங்கேயும் நகை திருடு போய் இருக்கலாம் என விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திடமும் போலீஸ் விசாரணையை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Also Read: எதிரிக்கு எதிரி நண்பன்.. தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா எனிமியிடம் காட்டும் நெருக்கம்

Continue Reading
To Top