புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

யாருக்கோ வந்த வினை என லண்டன் கிளம்பிய விஜய்.. பித்து பிடித்து திரியும் லோகேஷ்

Thalapathy Vijay: மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் லியோ. வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து பிரமோஷன் பணிகள் சூடு பிடிக்க துவங்கி விட்டது.

ஆனால் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் யாருக்கோ வந்த வினை என விஜய் ஜாலியாக லண்டன் கிளம்பியதால் தற்போது லோகேஷ் கனகராஜ் பித்து பிடித்தது போல் இருக்கிறார். லண்டனில் அப்படி என்னதான் இருக்கிறதோ 5 நாட்கள் விடுமுறை கிடைத்தால் கூட விஜய் லண்டன் பறந்து விடுகிறார்.

Also Read: லண்டனில் மீட்டிங் போடும் விஜய், சூர்யா.. விரைவில் வெளியாக இருக்கும் அடுத்த பட அப்டேட்

இப்பொழுதும் 12 நாட்கள் லண்டன் கிளம்பி உள்ளாராம். ஆனால் ஒரு மாதம் வரை அங்குதான் இருப்பார் எனவும் பேசிக் கொள்கின்றனர். இங்கே ஜெயிலர் ஆடியோ லான்ச் முடிந்ததிலிருந்து லியோ படத்தின் ஆடியோ லாஞ்சை பற்றி பேசத் தொடங்கி விட்டனர் .

லோகேஷ் கனகராஜ் லியோ ஆடியோ லான்ச் வெளிநாட்டில் திட்டமிட்டு இருந்தார். ஏனென்றால் இந்த முறை வெளிநாடுகளிலும் லியோ படத்தின் ப்ரீ பிசினஸ் அடி தூள் கிளப்பியது. ஆகையால் லியோ படத்தின் ஆடியோ லான்ச் வெளிநாட்டில் வைத்தால் படத்தின் வசூல் தாறுமாறாக இருக்கும் என நினைத்து திட்டமிட்டுள்ளனர்.

Also Read: எல்லாம் அனுபவிச்ச நீங்களே இப்படி பண்ணலாமா?.. லியோவால் சஞ்சய் தத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி

மேலும் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நடந்த பிறகு அந்தத் திட்டத்தை மாற்றிக்கொண்டார். இப்போது தமிழ்நாட்டில் நடத்த முடிவெடுத்துள்ளனர். சென்னையில் நேரு விளையாட்டு அரங்கத்தில் வைக்கலாமா இல்லை திருச்சி, கோயம்புத்தூர் சைடு போகலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்.

இதுக்கிடையில் விஜய், நமக்கு என்ன வந்திருக்கு என லண்டன் கிளம்பிவிட்டார். அவரும் ஏதாவது ஆலோசனை சொல்லி பட குழுவுடன் இந்த நேரம் இருந்திருக்க வேண்டும், அப்படி செய்யாமல் லண்டன் கிளம்பியது லோகேஷை மிகவும் வருத்தம் அடைய வைத்துள்ளது. இப்பொழுது லோகேஷ் கனகராஜ் ஆடியோ லான்சுக்கு என்ன செய்யலாம், விஜய் படம் என்றாலே பிரச்சனையை கிளப்புவார்கள் எனப் பித்து பிடித்தது போல் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

Also Read: மாஸ் ஹீரோ அந்தஸ்து இருக்குமா..? 3 வருட இடைவெளி இருந்தால் விஜய் சந்திக்கும் பிரச்சனை

- Advertisement -

Trending News