புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மாஸ் ஹீரோ அந்தஸ்து இருக்குமா..? 3 வருட இடைவெளி இருந்தால் விஜய் சந்திக்கும் பிரச்சனை

Actor Vijay: விஜய் இப்போது லோகேஷ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்திலும் நடிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து இன்னும் பல இயக்குனர்கள் இவருடைய தேதிகளை பெறுவதற்காக வட்டமிட்டு கொண்டிருக்கின்றனர்.

இப்படி இவருக்கான மாஸ் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இவர் மூன்று வருட காலம் சினிமாவுக்கு இடைவெளி விடப் போவதாக வெளிவரும் தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தன்னுடைய அரசியல் நகர்வுக்கான அடுத்த கட்ட வேலைகளை பார்த்து வரும் விஜய் எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.

Also read: சூப்பர் ஸ்டார் கொடுத்த சரியான டிப்ஸ்.. கொழுந்து விட்டு எரிகிற நெருப்பை புஸ்ஸுன்னு அணைத்த தலைவர்

ஆனால் இவருடைய அரசியல் களம் காணும் ஆசை எந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனென்றால் சினிமாவில் இருந்து பல நடிகர்கள் அரசியலுக்கு சென்று சாதித்தார்கள். ஆனால் சிலருக்கு அது பெரும் சறுக்களை கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் விஜயகாந்த் நன்றாக முன்னேறி வந்த நிலையில் பல பிரச்சனைகளின் காரணமாக இப்போது பொதுவெளியில் கூட அதிகம் வருவதில்லை. அதேபோன்று கமலின் அரசியல் வருகையும் அதிரடியாகத்தான் இருந்தது. ஆனாலும் அவர் இன்னும் தட்டு தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறார்.

Also read: லண்டனில் மீட்டிங் போடும் விஜய், சூர்யா.. விரைவில் வெளியாக இருக்கும் அடுத்த பட அப்டேட்

மேலும் சினிமாவை கூட கொஞ்ச காலம் ஒதுக்கிவிட்டு தீவிர அரசியலில் இறங்கிப் பார்த்தார். ஆனால் அது பலனளிக்காத நிலையில் தற்போது மீண்டும் சினிமாவிலேயே தன் கவனத்தை செலுத்த தொடங்கி விட்டார். அதேபோன்று ரஜினியும் அரசியலுக்கு வருவேன் என்று கூறி வந்தார்.

ஆனால் அது சரிப்பட்டு வராது என்று பின்வாங்கியவர் தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாகி விட்டார். இப்படி இருக்கும் சூழலில் விஜய் அரசியலுக்கு சென்று ஒரு வேலை அது சரிப்பட்டு வராத நிலையில் மீண்டும் சினிமாவுக்கு வந்தால் அவருடைய மாஸ் அந்தஸ்து திரும்ப கிடைக்குமா என்ற கேள்வி இப்போது எழுந்து வருகிறது.

Also read: ரஜினிக்கு வில்லனாகும் கமல்.. அடுத்த 1000 கோடி வசூலுக்கு லோகேஷ் போடும் புது கணக்கு!

ரஜினி, கமலை பொறுத்தவரை அவர்கள் தங்களுடைய இமேஜை காப்பாற்றிக் கொண்டார்கள். அந்த வகையில் விஜய் 3 வருடம் இடைவெளி விடுவதெல்லாம் ரொம்ப அதிகம். இப்போது இருக்கும் காலகட்டத்தில் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும். இதை விஜய் உணர்ந்து கொண்டு செயல்படுவது நல்லது என பலரும் இப்போது வெளிப்படையாக கூற ஆரம்பித்துள்ளனர்.

- Advertisement -

Trending News