புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

உட்கார்ந்த இடத்திலேயே ஆட்டம் காண வைக்கும்.. தளபதிக்கு கொம்பு சீவி விடும் விஷப் பூச்சிகள்

Actor Vijay: வரும் 2026 ஆம் ஆண்டு விஜய் அரசியலுக்கு வருவார் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் 2 வருடம் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபடும் திட்டமும் உண்டு. இன்று நடக்க இருந்த லியோ படத்தின் ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதற்கு தமிழகத்தின் ஆளும் கட்சி தான் காரணம் என சாதாரண மக்கள் சொல்லும் அளவுக்கு நம்ப வைத்துள்ளனர்.

அதுவும் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதற்கு உதயநிதியையும் கை காட்டுகின்றனர். ஏனென்றால் விஜய் அரசியலுக்கு வந்தால் தற்போதைய ஆளும் கட்சிக்கு தான் பெரிய தலைவலியாக இருக்கும். இதையெல்லாம் மனதில் வைத்து விஜய்யை சினிமாவிலும் அரசியலிலும் ஓரம் கட்ட பார்ப்பதாக சொல்கிறார்கள்.

Also Read: தளபதி விஜய் செய்யாததை செய்யப்போகும் சஞ்சய்.. அப்பா எட்டடி பாஞ்சா குட்டி 16 அடி பாயுது

அது நிஜம் என்றால் விஜய்யின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட நேரு ஸ்டேடியம் விளையாட்டு துறையின் கீழ் வந்ததால், அதன் அமைச்சரான உதயநிதி அந்த நிகழ்ச்சியை அங்கு நடத்தக்கூடாது என சொல்லி இருப்பார். ஆனால் அவர் அப்படி செய்யாமல் அதற்கு அனுமதி கொடுத்து எல்லாம் ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்தது. கடைசியில் போலீஸ் பாதுகாப்பு கொடுக்காததால் தான் அந்த நிகழ்ச்சி கேன்சலானது.

ஆனால் கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் ஆளுங்கட்சியையும் உதயநிதியையும் குற்றம் சாட்டுகின்றனர். அது பொய்யான தகவல் என விஜய்யும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்காமல் அமைதி காக்கிறார். இதன் மூலம் விஜய்யின் அரசியல் எதிரியாக பார்க்கப்படும் ஆளுங்கட்சியின் மீது வீட்டில் இருந்து கொண்டே கறையை ஏற்படுத்தி அவர்களை ஆட்டம் காண வைத்தார். இதையெல்லாம் செய்யச் சொல்லி அவரை சுற்றி இருக்கும் விஷமிகள் கொம்பு சீவி விடுகின்றனர்.

Also Read: நேர்மையான கேரக்டரில் கச்சிதமாக நடிக்கும் 5 ஹீரோக்கள்.. தளபதி மிரட்டிவிட்ட ஜீவானந்தம் கேரக்டர்

ஒரு வேலை இந்த ஆடியோ லான்ச் மட்டும் திட்டமிட்டபடி நடந்திருந்தால் அங்கு வருபவர்கள் எல்லாம் விஜய் மக்கள் மன்ற ரசிகர்கள் தான். அவர்களுக்கு தான் டிக்கெட் அனுப்பப்பட்டிருக்கிறது. லலித் பணத்தில் அரசியல் மாநாடு நடத்த விரும்பி இருக்கிறார் தளபதி. கடைசியில் அதை கேன்சல் செய்துவிட்டு மொத்த பழியையும் ஆளுங்கட்சி மீது போட்டு விட்டார். ஆனால் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்படுவதற்கு ஆளுங்கட்சி தரப்பில் எந்தவித சூழ்ச்சியும் செய்யவில்லை.

இருப்பினும் அவர்கள் தான் காரணம் என சோசியல் மீடியாவில் பரப்பப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் விஜய் ரசிகர்கள் திமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள் என்றும் கொந்தளிக்கின்றனர். இந்த சமயத்தில் மட்டும் உதயநிதி பாரிஸ் செல்லாமல் சென்னையில் இருந்திருந்தால் நிச்சயம் இந்த பிரச்சனைக்கு தான் மட்டுமல்ல ஆளுங்கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உடைத்துச் சொல்லி இருப்பார்.

Also Read: லியோவுக்கு மட்டும் தான் பிரச்சனைக்கு மேல பிரச்சனை.. அடுத்தடுத்து நேரு ஸ்டேடியத்தை ஆக்கிரமிக்கும் 4 படங்கள்

- Advertisement -

Trending News