நேர்மையான கேரக்டரில் கச்சிதமாக நடிக்கும் 5 ஹீரோக்கள்.. தளபதி மிரட்டிவிட்ட ஜீவானந்தம் கேரக்டர்

kaththi-vijay
kaththi-vijay

5 Tamil Heroes: பெரும்பாலும் படங்களில் ஹீரோக்கள் மாஸ் காட்டி ரசிகர்களின் கைதட்டுகளை சுலபமாகபெற்று விடுகின்றனர். ஆனால் போரிங் என்று நினைக்கக்கூடிய நேர்மையான கேரக்டர்களில் ஹீரோக்கள் கச்சிதமாக நடித்து பெயரெடுத்தனர். அதிலும் விவசாயிகளுக்காக வெகுண்டு எழுந்த ஜீவானந்தம் என்ற கேரக்டரில் விஜய் நடித்து மிரட்டிவிட்டார்.

மாதவன்: 90களில் சாக்லேட் பாயாக இருந்த மாதவன், 2007 ஆம் ஆண்டு வெளியான எவனோ ஒருவன் படத்தில் நேர்மையான மனிதனாக ஸ்ரீதர் என்ற கேரக்டரில் நடித்தார். இதில் இவர் தன்னை சுற்றி நடக்கும் சட்ட விரோதமான நடவடிக்கைகளால் எரிச்சல் அடைகிறார். முடிந்தவரை அவற்றை மாற்ற நினைக்கும் போது, மற்றவர்களின் கோபத்திற்கும் ஆளாகிறார். கடைசியில் அவரை ஒரு குற்றவாளியாக போலீஸ் கைது செய்து, கடைசியில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படுவார். இந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தாலும், இதில் மாதவனின் நடிப்பு சிறப்பாக இருந்தது.

Also Read: பத்து பைசா கூட மூளையை செலவழிக்காத இறைவன் படக்குழு.. மொத்தமாக டேமேஜ் செய்த ப்ளூ சட்டை

விக்ரம்: தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் மெனுக்கிடும் விக்ரம், சங்கர் இயக்கத்தில் நடித்து சூப்பர் ஹிட் அடித்த படம் தான் அந்நியன். இதில் இவர் அம்பி, ரெமோ, அந்நியன் என்ற மூன்று வேடத்தில் நடித்தார். அதிலும் அம்பி ஒரு நேர்மையான வக்கில் ஆக இருந்து யாராவது சட்டத்தை மீறினால் சட்டப்படி வழக்குத் தொடர்வார்.

ஆனால் அவரை ஒரு காமெடி பீஸ் ஆகவே பார்த்தனர். அம்பி ஆக விக்ரமின் நடிப்பு அச்சு அசலாக இருந்தது. அதே படத்தில் அம்பிக்கு எதிர்மறாக ரொமான்டிக் லுக்கிங் ரெமோ ஆகவும், கொடூரமான கொலைகளை செய்யும் அந்நியனாகவும் விக்ரம் மிரட்டினார்.

Also Read: கமல் சொல்வதை கொஞ்சம் கூட மதிக்காத ஷங்கர்.. இந்தியன் 2 மீண்டும் துளிர் விட்ட சண்டை

விஜய்: தளபதி விஜய் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கதிரேசன், ஜீவானந்தம் என இரட்டை கேரக்டரில் நடித்த படம் தான் கத்தி. இந்த படத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தால் விவசாயம் அழிவதை அழுத்தமாக சொன்னார்கள். ஒரு பக்கம் தண்ணீர் இல்லாமல் விவசாயம் அழிகிறது, மறுபக்கம் நம்முடைய தண்ணீரையே பாட்டிலில் அடைத்து காசுக்கு விற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக இந்தப் படத்தில் விஜய் நேர்மையான மனிதனாக ஜீவானந்தம் என்ற கேரக்டரில் வெளுத்து வாங்கினார். இந்தப் படத்திற்கு பிறகு
தான் விஜய்யின் அரசியல் ஆசை வெளிவந்தது.

சமுத்திரக்கனி: மாவட்டத்திலேயே தேர்ச்சியில் பின் தங்கிய அரசு பள்ளி ஒன்றிற்கு ஆசிரியராக செல்லும் சமுத்திரக்கனி அந்தப் பள்ளியில் இருக்கும் நிலையை மாற்ற ஸ்மார்ட் ஆக யோசித்து செயல்படுகிறார். இதில் தயாளன் என்ற கேரக்டரில் நேர்மையான ஆசிரியராக தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி, ஒவ்வொரு ஆசிரியரும் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதை சமுத்திரக்கனி கண் முன் காட்டினார்.

Also Read: லியோ மேடை கிடைக்காததால் பாட்டு வரிகள் மூலம் பதிலடி கொடுத்த விஜய்.. காக்கா கழுகு சண்டை ஓயாது போல

ஜெயம் ரவி: சமுத்திரக்கனி இயக்கிய நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி, அரவிந்தன் மற்றும் நரசிம்ம ரெட்டி என இரட்டை வேடத்தில் நடித்தார். இதில் ஆசிரமம் ஒன்றில் தங்கி ஒழுக்கத்துடனும் கண்ணியத்துடனும் நேர்மையான மனிதராக வலம் வரும் அரவிந்தன் கதாபாத்திரம் சமுதாயத்தில் சட்டம், ஒழுங்கை மக்கள் மதிப்பதில்லை என்று மனதிற்குள் பொங்குகிறார். அதை எதிர்த்து போராடவும் செய்கிறார். இதில் ஜெயம் ரவி சிறப்பாக நடித்து பெயர் வாங்கினார்.

Advertisement Amazon Prime Banner