லியோவுக்கு மட்டும் தான் பிரச்சனைக்கு மேல பிரச்சனை.. அடுத்தடுத்து நேரு ஸ்டேடியத்தை ஆக்கிரமிக்கும் 4 படங்கள்

Thalapathy Vijay – Leo Movie: அட என்னம்மா இங்க சத்தம் என்பது போல் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைதளமே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் தளபதி விஜய் ரசிகர்கள் தான். லியோ ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதால், தளபதி ரசிகர்கள் ஒரு பக்கம் புலம்பிக் கொண்டிருக்க, அவர்களுக்கு ஆறுதல் சொல்கிறேன் என அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் ஆதரவு தெரிவிக்க சமூக வலைத்தளம் முழுக்க சோக கீதமாக போய்க்கொண்டிருக்கிறது.

லியோ பட குழுவும் புண்பட்ட விஜய் ரசிகர்களின் மனதை தேற்றுவதற்காக அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கிறது. லியோ ஆடியோ லான்ச் இணைத்து பல கனவுகள் கண்டு கொண்டிருந்த ரசிகர்களுக்கும், பிரபலங்களுக்கும் இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது. எங்களுக்கு லியோ பட ஆடியோ லான்ச் மட்டும்தான் பிரச்சனை என்பது போல் நேரு ஸ்டேடியத்தில் அடுத்தடுத்து நான்கு படங்களின் ஆடியோ லான்ச் நடக்க இருக்கிறது.

Also Read:உலக நாயகனை உப்புக்குச் சப்பாணியாக பயன்படுத்திய லோகேஷ்.. இது தெரியாமல் பூரித்துப் போன விஜய்

ஜப்பான்: ஜோக்கர் மற்றும் குக்கூ என்ற இரண்டு தரமான படங்களை இயக்கிய ராஜமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் ஜப்பான். இந்த படம் தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருக்கிறது. ஜப்பான் படத்தின் ஆடியோ லான்ச் நேரு ஸ்டேடியத்தில் தான் நடக்கப் போகிறது.

அயலான்: ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் அயலான். இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. அயலான் படத்தின் ஆடியோ லாஞ்சும் நேரு ஸ்டேடியத்தில் தான் நடக்கிறது. ஏற்கனவே மாவீரன் பட இசை வெளியீட்டு விழாவில் போது சிவகார்த்திகேயனை ரஜினி என்று சொல்லி பெரிய சர்ச்சை கிளம்பியது. அயனா இசை வெளியீட்டு விழாவின் போது என்ன செய்ய காத்திருக்கிறார்களோ பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read:லியோ மேடை கிடைக்காததால் பாட்டு வரிகள் மூலம் பதிலடி கொடுத்த விஜய்.. காக்கா கழுகு சண்டை ஓயாது போல

இந்தியன் 2: கடந்த ஐந்து வருடங்களாக கமலின் மிகப்பெரிய காத்திருப்பு தான் இந்தியன் 2 படம். இந்த படத்தின் தொழில்நுட்ப வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தியன் 2 ஆடியோ லாஞ்சும் நேரு ஸ்டேடியத்தில் தான் நடக்கிறது. கமல் படம் என்பதால் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் நிறைய பெரிய தலைகள் இந்த நிகழ்ச்சிக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: தமிழ் சினிமாவின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ஜிகர்தண்டா. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கார்த்திக் சுப்புராஜ் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யாவை வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த படமும் வரும் தீபாவளி நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது. அதற்கு முன் படத்தின் ஆடியோ லான்ச் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.

Also Read:எதுக்காகவும் யார்கிட்டயும் மண்டியிட மாட்டேன்.. அரசியலில் கால் பதிப்பதால் எல்லாத்துக்கும் துணிந்த விஜய்

- Advertisement -