பல வருடங்களுக்குப் பிறகு அண்ணன் தம்பியை சேர்த்து வைத்த விஜய்.. தளபதி 68ல் நடக்கப்போகும் கூத்து

Thalapathy 68: தளபதி விஜய் லியோ படம் ரிலீஸ் ஆன கையோடு அடுத்து தன்னுடைய 68 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார் என்ற தகவலை தவிர வேறு எந்த அப்டேட்டுகளும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருந்தாலும் படத்தில் யார் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்ற லிஸ்ட் மட்டும் லீக் ஆகிக்கொண்டே இருக்கிறது.

குஷி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் மற்றும் ஜோதிகாவை இணைத்து விட வேண்டும் என்று வெங்கட் பிரபு ரொம்பவும் ஆசை பட்டார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தற்போது தோல்வியில் முடிந்திருப்பது போல் தெரிகிறது. டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Also Read:உட்கார்ந்த இடத்திலேயே கரிய பூசிய விஜய்.. தளபதிக்கு கொம்பு சீவி விடும் விஷப் பூச்சிகள்

90ஸ் கிட்ஸ் களின் பேவரைட் ஹீரோவான டாப் ஸ்டார் பிரசாந்த் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. மேலும் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்த நடிகர் ஜெய் கிட்டத்தட்ட 23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய் படத்தில் இணைகிறார். இந்த வரிசையில் லீக் ஆன பெயர்தான் பிரபுதேவா. நடிகர் மற்றும் நடன இயக்குனர் ஆன இவரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்.

பிரபுதேவா ஏற்கனவே போக்கிரி படத்தை இயக்கியவர். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த கூட்டணியில் உருவான வில்லு படம் தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து பிரபுதேவாவுக்கு தன் படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கும் விஜய், மற்றொரு கூட்டணியையும் உருவாக்கி இருக்கிறார்.

Also Read:தளபதி விஜய் செய்யாததை செய்யப்போகும் சஞ்சய்.. அப்பா எட்டடி பாஞ்சா குட்டி 16 அடி பாயுது

பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரம் மாஸ்டர் இந்த படத்தில் நடனம் அமைக்க இருக்கிறார். கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு பிரபு தேவா மற்றும் ராஜு சுந்தரம் படத்தில் இணைகிறார்கள். தொண்ணூறுகளின் காலகட்டத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள். மீண்டும் இந்த அண்ணன் தம்பி கூட்டணி தளபதி 68 இல் களமிறங்குகிறது.

சோலியான் குடுமி சும்மா ஆடாது என்று ஒரு பழமொழி இருக்கிறது. அப்படித்தான் பிரபுதேவாவும், ராஜு சுந்தரமும் இந்த படத்தில் இணைந்திருப்பதும். இருவருக்குமே விஜய் வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. தளபதி 68 படப்பிடிப்பில் விஜய்யை எப்படியாவது தாஜா பண்ணி வாய்ப்பை வாங்கி விட வேண்டும் என்பதுதான் மாஸ்டர் பிளான்.

Also Read:நேர்மையான கேரக்டரில் கச்சிதமாக நடிக்கும் 5 ஹீரோக்கள்.. தளபதி மிரட்டிவிட்ட ஜீவானந்தம் கேரக்டர்

- Advertisement -