குரங்குக்கு வாக்கப்பட்டா குட்டிக்கரணம் போட்டு தான் ஆகணும்.. மன்சூர் அலிகானால் படாத பாடுபடும் லோகேஷ்

Lokesh, Mansoor Ali Khan: லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களில் நிறைய விஷயங்கள் மன்சூர் அலிகான் உடைய இன்ஸ்பிரேஷனல் எடுத்திருப்பார். ஏனென்றால் சிறு வயது முதலே அவர் மீது லோகேஷ்க்கு அதிக ஈடுபாடு இருந்துள்ளது. அதுவும் கைதி படத்தை மன்சூர் அலிகானை மனதில் வைத்து தான் லோகேஷ் கதையை எழுதினாராம்.

ஆனால் சினிமாவுக்கு வந்த சில காலம் லோகேஷ் மற்றும் மன்சூர் அலிகான் இருவரும் சந்தித்துக் கொண்டதே இல்லை. ஆனால் தன்னுடைய ஒரு படத்திலாவது அவரை நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை லோகேஷுக்கு இருந்துள்ளது. அதன்படி இப்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்திருக்கிறார்.

Also Read : லியோவை சுற்றி பின்னப்படும் 5 சதிவலைகள், குழப்பத்தில் விஜய்.. 500 கோடிக்கே திணறும் லோகேஷ்

ஆனால் மன்சூர் அலிகான் சுபாவம் பற்றி எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். ஏனென்றால் எல்லா விஷயத்தையும் முகத்திற்கு நேராக சொல்லி போட்டு உடைக்க கூடியவர். லியோ படத்தைப் பற்றிய சில விஷயங்களை மன்சூர் அலிகான் வெளியே சொன்ன நிலையில் லோகேஷ் அதன் பிறகு எந்த விஷயங்களும் கசிய கூடாது என ஸ்ட்ரிட்டாக சொல்லி உள்ளார்.

ஆனாலும் குரங்குக்கு வாக்கப்பட்டால் குட்டிக்கரணம் போட்டு தான் ஆக வேண்டும் என்பது போல மன்சூர் அலிகான் இடம் சிக்கிக்கொண்டு படாதபாடு பட்டு வருகிறார் லோகேஷ். அதாவது சரக்கு என்ற படத்தில் மன்சூர் அலிகான் ஆயி மகமாயி என்ற பாடல் வரிகளை எழுதி இசை அமைத்திருக்கிறார். இந்த பாடலை லோகேஷ் தான் வெளியிட வேண்டும் என விரும்பி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Also Read : ரிலீசுக்கு முன்பே பல நூறு கோடி கல்லா கட்டிய லியோ.. RRR வசூலை முறியடிக்க லோகேஷ் போட்ட திட்டம்

தனக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் லோகேஷ் இந்த பாடலை வெளியிட்டு இருக்கிறார் என்பது போல தான் ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. அவருடைய முகத்தில் சிறு புன்னகை கூட இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

லோகேஷை பொருத்தவரையில் தனக்கு விருப்பமில்லாத சில விஷயங்களை எப்போதுமே செய்ய மாட்டார். ஆனால் இப்போது மன்சூர் அலிகானால் நிர்பந்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார். தேவையில்லாமல் தலையை கொடுத்து மாட்டிக் கொண்டோமே என்பதுதான் இப்போது லோகேஷின் மைன்ட் வாய்ஸாக இருக்கும்.

Also Read : 5 ஹீரோக்களின் வாழ்க்கையை தூக்கி நிறுத்திய லோகேஷ்.. அர்ஜுன் தாஸ்க்கு கொடுக்கப்பட்ட அதிக வாய்ப்பு

- Advertisement -