வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சுயலாபத்திற்காக அரசியலில் குதித்த 5 ஹீரோக்கள்.. மண்டபத்தை இடித்ததால் கேப்டன் உருவாக்கிய வரலாறு

Political Entry Of 5 Heroes:  திரையுலகில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்த பல பிரபலங்கள் அரசியலிலும் களம் கண்டுள்ளார்கள். அதில் சுயலாபத்திற்காகவும், உள்நோக்கத்திற்காகவும் அரசியலில் குதித்த நடிகர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதில் வெற்றி கண்டார்களா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான்.

அந்த வகையில் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கினார். ஆனால் அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. அதேபோன்று தான் நவரச நாயகன் கார்த்திக் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற ஒன்றை ஆரம்பித்தார். ஆனால் இப்போது அவர் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.

Also read: ரஜினி கர்நாடகா பக்கம் வரக்கூடாது.. நீ இங்க வந்தா நாக்க அறுப்போம், சீறிப்பாய்ந்த பயில்வான்

அடுத்ததாக டி ராஜேந்தரும் தாயக மறுமலர்ச்சி கழகம், இலட்சிய முன்னேற்ற கழகம் என இரு கட்சியை தொடங்கினார். ஆனால் அவரும் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டார். அதேபோன்று விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார்.

இதற்கு முக்கிய காரணம் அவருடைய திருமண மண்டபத்தை இடித்ததால் வந்த கோபம் தான். வந்த வேகத்திலேயே மக்களின் ஆதரவையும் பெற்றார். அதனாலேயே பல முக்கிய கட்சிகள் இவரைப் பார்த்து மிரண்ட வரலாறும் உண்டு. ஆனால் இப்போது உடல் நலக்குறைவின் காரணமாக பொதுவெளியில் வருவதை இவர் தவிர்த்து விட்டார்.

Also read: கமலின் உண்மை முகத்தை கிழித்தெறிந்த எக்ஸ் மனைவி.. இப்படியெல்லாமா அசிங்கபடுத்துறது

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் தன்னுடைய ரசிகர்களின் ஆசைக்காக அரசியலுக்கு நிச்சயம் வருவேன் என்று வாக்கு கொடுத்தார். ஆனால் சில பல காரணங்களால் அவர் கட்சியை கூட தொடங்காமல் பின்வாங்கி விட்டார். இது இப்போது வரை ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமாக தான் இருக்கிறது.

அதேபோன்று கமலும் ஆதிக்க அரசியலுக்கு எதிராக பல கருத்துக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து அவர் பல இன்னல்களுக்கும் ஆளானார். அதனாலேயே அவர் இப்போது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார்.

Also read: நான் வீழ்வேனென்று நினைத்தாயோ, பதிலடிக்கு தயாராகும் விஜய்.. மிரட்ட வரும் லியோ ட்ரெய்லர், எப்ப தெரியுமா?

அவரை போன்று தான் முதலமைச்சர் ஆசையில் விஜய்யும் அரசியல் களத்தில் குதிப்பதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார். இதிலும் ஒரு உள்நோக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு சில இடையூறுகளும் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் அவர் விரைவில் கட்சியை ஆரம்பித்து ஆட்டத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Trending News