ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

6 மாதமாக வலிகளை தாங்கி இறுகிப்போன விஜய் ஆண்டனி.. நிலைகுலைய வைத்த மகளின் மரணம்

Vijay Antony: இப்போது எங்கு திரும்பினாலும் விஜய் ஆண்டனியின் மகள் பற்றிய செய்தி தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இது கனவாக இருந்து விடக் கூடாதா என்று ஒவ்வொருவரும் நினைக்கும் அளவுக்கு நெஞ்சை அடைக்க செய்கிறது மீராவின் மரணம்.

இதை பல பிரபலங்கள் வெளிப்படையாகவே ஆதங்கத்துடன் கூறினார்கள். அதிலும் கடந்த ஆறு மாதமாகவே விஜய் ஆண்டனிக்கு கஷ்ட காலம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது நடந்த விபத்திலிருந்து அவர் மீண்டு வந்ததே பெரிய விஷயம் தான்.

Also read: 16 வயதில் விபரீதத்தை தேடிய மீரா, மன அழுத்தம் வர என்ன காரணம்.? ஆதாரத்தோடு பயத்தை காட்டிய மனநல மருத்துவர்

ஏனென்றால் அந்த சம்பவத்தால் அவருடைய தாடை எலும்புகள் அதிகமாக பாதிக்கப்பட்டது. அதிலும் மொத்த பல்லும் உடைந்து போய் முதுகெலும்பு பாதிக்கப்பட்டு பல கஷ்டங்களை அவர் அனுபவித்தார். இப்போதும் கூட அவர் சாப்பிடுவதற்கு சிரமப்பட்டு தான் வருகிறார்.

ஒரு இட்லியை சாப்பிட அரை மணி நேரம் ஆகுமாம். அந்த அளவுக்கு அந்த விபத்து அவரை புரட்டி போட்டு விட்டது. அதை எல்லாம் சமாளித்து வந்த அவருக்கு சில கடன் நெருக்கடிகளும் இருக்கிறது. அதனாலேயே அவர் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டு இருக்கிறார்.

Also read: விஜய் ஆண்டனியின் ரணப்பட்ட மனசை குத்தி கிழிக்கும் மீடியா.. மீராவின் மரணத்தை வியாபாரமாக்கும் கேவலம்

ஆனால் குடும்பம் என்று வந்துவிட்டால் அதற்குத்தான் அவர் முக்கியத்துவம் கொடுப்பாராம். எந்த வேலையாக இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு தன் பிள்ளைகளுக்காகவே ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.

அப்படிப்பட்டவருக்கு பேரிடியாக அமைந்து விட்டது மூத்த மகளின் மரணம். இதனால் மொத்தமாக நிலைகுலைந்து போய் இருக்கும் அவருக்கு அதிலிருந்து வெளியில் வருவதற்கே பல வருடங்கள் ஆகும். அதுவரை எந்த மீடியாக்களும் அவரை தொந்தரவு செய்யாமல் நாகரிகத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Also read: குழந்தைகளை பறிக்குடுத்து தவிக்கும் 5 பிரபலங்கள்.. மீராவால் மீளவே முடியாத துயரத்தில் விஜய் ஆண்டனி

- Advertisement -

Trending News