ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

குழந்தைகளை பறிக்குடுத்து தவிக்கும் 5 பிரபலங்கள்.. மீராவால் மீளவே முடியாத துயரத்தில் விஜய் ஆண்டனி

Vijay Antony: பொதுவாக பெற்றோர்கள் இருக்கும் போது அவர்களின் குழந்தைகள் இறப்பு அவர்களை மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தும். ஏனென்றால் உலகிலேயே மிகப்பெரிய கொடுமை புத்திர சோகம் தான் என்று கூறுவார்கள். அவ்வாறு குழந்தைகளை பறி கொடுத்து தவித்த ஐந்து பிரபலங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சித்ரா : சினிமாவில் பின்னணிப் பாடகியாக பல அற்புதமான பாடல்களை கொடுத்தவர் தான் சின்னக்குயில் சித்ரா. இவருக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து தான் நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து தனது மகளை சித்ரா இழந்துவிட்டார்.

Also Read : விஜய் ஆண்டனியின் ரணப்பட்ட மனசை குத்தி கிழிக்கும் மீடியா.. மீராவின் மரணத்தை வியாபாரமாக்கும் கேவலம்

விவேக் : நகைச்சுவை நடிகர் என்றால் நமக்கு உடனே ஞாபகத்திற்கு வருவது சின்ன கலைவாணர் விவேக் தான். இவரது மகன் பிரசன்னா டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்து விட்டார். இந்த சோகமே விவேக் மிகுந்த மன கஷ்டத்தில் ஆழ்த்தியது. அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு விவேக் உயிரிழந்தார்.

கபிலன் : சினிமாவில் அற்புதமான பாடல் வரிகளை கொடுத்தவர் கபிலன். இவருடைய எண்ணில் அடங்கா பாடல்கள் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கபிலனின் மகள் தூரிகை தற்கொலை செய்து கொண்டார். மிகவும் துணிச்சலான பெண்ணான தூரிகையின் இழப்பு கபிலனை மன வேதனைக்குள் தள்ளியது.

Also Read : பட டைட்டில் தான் விஜய் ஆண்டனியை பழி வாங்கியது.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய பயில்வான்

ஆஷா போஸ்லே : புகழ்பெற்ற பாடகியாக வலம் வந்து கொண்டிருந்த ஆஷா போஸ்லே பல்லாயிரம் கணக்கான பாடல்களை கொடுத்திருக்கிறார். ஆனால் அவரது சொந்த வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் மிகவும் துயரமாகத்தான் இருக்கும். 2012 ஆம் ஆண்டு மகள் வர்ஷா தற்கொலை செய்து கொண்ட நிலையில் 2015 ஆம் ஆண்டு அவருடைய மூத்த மகன் ஹேமந்த் புற்றுநோயால் உயிரிழந்தார்.

விஜய் ஆண்டனி : இசையமைப்பாளராக அறிமுகமாகி இப்போது நடிகராக பல படங்களில் நடித்து வருபவர் விஜய் ஆண்டனி. சமீபத்தில் இவரது மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் நெஞ்சை பதப்பதைக்க வைத்திருந்தது. இப்போது மீராவால் மீள முடியாத துயரத்தில் விஜய் ஆண்டனி இருந்து வருகிறார்.

Also Read : விஜய் ஆண்டனியின் மகள் மீராவை பற்றி பயில்வான் வெளியிட்ட தகவல்.. ஆண்டவனுக்கே வெளிச்சம்!

- Advertisement -

Trending News