டிஆர்பி-க்கு அடித்துக்கொள்ளும் சன் மற்றும் விஜய் டிவி.. டாப் இரண்டு இடத்தை பிடித்த சீரியல்கள்!

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை இஷ்டமா பார்க்கிறார்கள் என்பதை அந்த வாரத்தின் இறுதி நாளில் வெளியான டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தெரிந்துகொள்ளலாம். அந்தவகையில் கடந்த வாரம் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல் டிஆர்பி ரேட்டிங் வெளியாகி வைரலாக பரவுகிறது.

இதில் வழக்கம்போல் சன் டிவியின் கயல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் லிஸ்டை எப்போதும் போலவே இந்த முறையும் பிடித்திருக்கிறது. இதில் கதாநாயகனாக சஞ்சீவ் மற்றும் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி இருவரும் நடித்து ரசிகர்களிடையே இந்த சீரியலை பிரபலமான சீரியலாக மாற்றி இருக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து இரண்டாவது இடம் அண்ணன் தங்கையின் பாசப் போராட்டத்தை அழகாக காட்டிய வானத்தைப்போல சீரியலுக்கும் கிடைத்துள்ளது. இதில் திருமண வைபவம் கடந்த வாரம் நடந்ததால் ரசிகர்களும் ஆர்வத்துடன் இந்த சீரியலை கண்டுகளித்தனர். மூன்றாவது இடம் கண்ணான கண்ணே சீரியலுக்கும், நான்காவது இடம் ரொமான்டிக் அதிரடி சீரியலாக பார்க்கப்படும் சன் டிவியின் ரோஜா சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது.

எப்போதுமே முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் சுந்தரி சீரியல், தற்போது டிஆர்பி-யில் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இதைப்போன்று சன் டிவியுடன் எப்பவுமே அடிதடியில் இருக்கும் விஜய் டிவியும் டி ஆர்பி-யில் முதல் இரண்டு இடத்தை ஒரே சீரியல் பெற்று தும்சம் செய்திருக்கிறது.

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி 2 சீரியல்களும் முதல் இரண்டு இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை ராதிகா சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே வெறுத்து ஒதுக்கி நாய்போல் துரத்தி விட்டது அந்த சீரியலுக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதைப்போல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்திக்கு திடீரென்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு சீரியலின் விறுவிறுப்பை கூட்டினர். 3-வது இடம் பாரதி கண்ணம்மா சீரியலுக்கும், 4-வது இடம் ராஜா ராணி2 சீரியலுக்கும், 5-வது இடம் மௌனராகம் சீரியலுக்கும் கிடைத்துள்ளது.

Next Story

- Advertisement -