ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வெற்றிமாறன் 47 முறை பார்த்த கமலின் படம்.. இயக்குனராக காரணமாக இருந்த 3 படங்கள்

Director Vetrimaran: வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்து வரும் இயக்குனர்களின் வரிசையில் இயக்குனர் வெற்றிமாறனும் இருக்கிறார். இவரது படைப்புகள் எல்லாமே வித்தியாசமான கதைக்களத்துடன் தான் இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி எப்பொழுதுமே தமிழ் சினிமாவின் வெற்றிக் காம்போ என்ற பெயரை வாங்கி விட்டது.

இந்நிலையில் வெற்றிமாறனின் இயக்கத்தில் கடைசியாக விடுதலை படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதுவரை காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சூரியை ஒரு சிறந்த கதாநாயகனாக மாற்றிய பெருமை வெற்றிமாறனை தான் சேரும். இவருக்கு இயக்குனராக விருப்பம் வர காரணமாக இருந்தது மூன்று படங்கள் தான்.

Also Read : வெற்றிமாறனின் சூப்பர் ஹிட் படத்தை பிடுங்கிய தனுஷ்.. எஸ்ஜே சூர்யா கூட்டணியில் 50வது படம்

அதுவும் குறிப்பாக கமலின் படத்தை 47 முறை பார்த்திருக்கிறார். அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான நாயகன் படம் தான் வெற்றிமாறனுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தது. இப்போது வரும் பல இயக்குனர்கள் கமலின் படம் தான் தங்களுக்கு உத்வேகத்தை கொடுத்தது என்று கூறி வருகிறார்கள்.

இயக்குனர் லோகேஷுக்கும் நாயகன் படம் மிகவும் பிடித்ததாக பல மேடையில் கூறியிருக்கிறார். வெற்றிமாறனுக்கு நாயகன் படத்துக்கு அடுத்ததாக அழியாத கோலங்கள் மற்றும் டாக்டர் ராஜசேகரனின் டப்பிங் படமான மீசைக்காரன் போன்ற படங்கள் திரும்பத் திரும்ப பார்க்கத் தோன்றிய படங்களாக அமைந்திருக்கிறது.

Also Read : ரெட் கார்டை யாரும் மதிக்காமல் செய்த ஹீரோ.. தனுஷ் அதர்வாவெல்லாம் தெனாவட்டாய் போடும் பேயாட்டம்

ஆகையால் தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பான்மையான நடிகர்கள் முந்தைய தலைமுறையினரை படங்களை பார்த்து தான் இப்போது படங்களை இயக்கி வருகிறார்கள். ஆனாலும் லோகேஷ், நெல்சன் போன்ற இயக்குனர்களின் படங்கள் மிகவும் வன்முறை காட்சி அதிகமாக இருக்கும் படி எடுத்து வருகிறார்கள்.

ஆனால் இதில் வெற்றிமாறன் சற்று வித்தியாசமான கதை களத்தை கொண்டு படங்களை வெற்றிக்கான வைத்து வருகிறார். அவருடைய விடுதலை 2 படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் சூர்யா, வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் படமும் உருவாக இருக்கிறது.

Also Read : 5 ஹீரோக்களின் வாழ்க்கையை தூக்கி நிறுத்திய லோகேஷ்.. அர்ஜுன் தாஸ்க்கு கொடுக்கப்பட்ட அதிக வாய்ப்பு

- Advertisement -

Trending News