வெற்றிமாறனின் சூப்பர் ஹிட் படத்தை பிடுங்கிய தனுஷ்.. எஸ்ஜே சூர்யா கூட்டணியில் 50வது படம்

Actor Dhanush: பொதுவாக தன்னிடம் திறமை இருந்தால் யாரையும் அண்டிப் பிழைக்க வேண்டாம் என்பதுதான் வழக்கம். அப்படித்தான் இயக்குனர் வெற்றிமாறன் சினிமாவில் பயணித்துக் கொண்டு வருகிறார். அதாவது எந்த முன்னணி நடிகர்களையும் நம்பி படத்தை எடுக்க கூடிய சாதாரண இயக்குனர் இல்ல. தன்னுடைய கதையின் மீது நம்பிக்கை வைத்து ஹிட் படத்தை கொடுக்கக் கூடியவர்.

அப்படிப்பட்ட இவருடன் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட மாட்டோமா என்று பல ஹீரோக்கள் கங்கணம் கட்டிக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இவருடைய முழு கவனமும் கதைக்கு ஏற்ற நாயகனை நடிக்க வைப்பது தான் என்று அதற்கேற்ற கதாநாயகர்களை தேர்வு செய்து படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார்.

Also read: சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் வெற்றிமாறன்.. சூரியை வைத்து மீண்டும் கல்லா கட்ட போட்ட திட்டம்

அப்படி இவருடன் கூட்டணி நடித்து வெற்றி பெற்று தற்போது முன்னணி நடிகராக வளர்ந்தவர் தான் தனுஷ். இவர் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது வெற்றிமாறன் என்றே சொல்லலாம். அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் வெளிவந்து வெற்றி பெற்ற படங்களான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன்.

இந்த படங்கள் அனைத்தும் தனுசுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கேரியரை உச்சத்திற்கு கொண்டு போய் சேர்த்து விட்டது. அப்படிப்பட்ட இவர் வெற்றிமாறனின் சூப்பர் ஹிட் படத்தின் கதையை பிடுங்கி இயக்குவதற்கு முடிவெடுத்து இருக்கிறார். அதாவது வடசென்னை தனுசுக்கு மட்டும் இல்ல வெற்றிமாறனுக்கும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

Also read: சூர்யாவை டீலில் விட்டாரா வெற்றிமாறன்.? வருஷ கணக்கில் காக்க வைத்த வாடிவாசல், எதிர்பாராத ஷாக்

அப்படிப்பட்ட இந்த படத்தின் கதையை தனுஷ் அவருடைய ஐம்பதாவது படமாக இயக்கப் போகிறார். இந்த படத்தில் தனுசு உடன் எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சந்திப் கிஷன், தசரா விஜயன் போன்ற ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். என்னதான் தனுஷ் அவருடைய ஸ்டைலில் புதுவிதமாக எடுத்தாலும் அது வெற்றிமாறனின் கதையாக தான் இருக்கிறதாம்.

எப்படி தனுஷ், வெற்றிமாறனுக்கு இந்த மாதிரி ஒரு துரோகத்தை செய்கிறார். இவருடைய கேரியரில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததே வெற்றிமாறன் தான். அப்படி இருக்கும் போது அவர் முதுகிலேயே குத்தி தனுஷ் மேலே வர இருக்கிறார். இது எந்த அளவிற்கு தனுசுக்கு வெற்றியை கொடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை.

Also read: அவதாருக்கே டஃப் கொடுக்க போகும் வெற்றிமாறன்.. உச்சகட்ட எதிர்பார்ப்பை எகிற வைத்த விடுதலை 2

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -